Saturday, July 23, 2016

அரசறிவியல் எண்ணக் கருக்கள்

அரசியல் என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசியல் என்பது ஒரு நடைமுறைக் கலையாகும்.அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மனித சமூக்தில் அரசியல் போராட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரயோகச் செயன்முறையாகும்.அதாவது அரசியல் வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் செயற்பாடுகளே முக்கியத்துவம் பெறும் அரசியல் பற்றி பேசும் போது ஒரு அரசியல் முறை எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகள் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் அவற்றுக்கு முன்வைக்கும் கொள்கைத் தீர்வுகள் அவற்றுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகள் அதிகாரப் போராட்டத்தினூடாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் போன்ற செயற்பாடுகள் அடங்கும்.

அரசறிவியல் என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசறிவியல் என்றால் என்ன என்பதற்கு பொதுவான வரைவிலக்கணம் கூற முடியாது.எனினும் பல அறிஞர்களும் வெவ்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.அரசு ,அரசாங்கம் ,அதிகாரம் என்பன பற்றி கற்கும் கலையே அரசறிவியல் என்றும். அரசறிவியல் என்பது அரசு அரசாங்கம் அதிகாரம் மக்களுக்கும் அரசுக்குமிடையிலான தொடர்பு மனிதனின் அரசியல் நடத்தை பொருளாதார கொள்கை பற்றி
விஞ்ஞான ரீதியாக கற்கும் ஒரு சமூக விஞ்ஞான பாடம் என்றும் கூறுகின்றனர். அரசறிவியல் காலத்துக்கு காலம் மாற்றமடையக் கூடிய பாடமாகும் அனைத்தும் அரசுடனே ஆரம்பித்து அரசுடனே முடிவடைகிறது. கால ரீதியாக இடம்பெறும் அரசியல் நிகழ்வுகள் கற்கப்படுகின்றன.எனவே பல ஆய்வுகளை மேற்கொள்ளும் கற்கை நெறியே அரசறிவியலாகும்.
அரசறிவியலில் அரசியல் அறிஞர்களும் ஆய்வாளர்களும் சம்பந்தப்படுகின்றனர்.அரசியல் என்ற சொல்லினை முதலாவதாக பயன்படுத்தியவர் கிரேக்க தத்துவ ஞானியான அறிஸ்டோட்டில் ஆவார். இது தொடர்பாக polis என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது.சமகாலத்தில் கிரேக்கத்தில் நிலவிய மிகச்சிறந்த அரச முறையும் அரசாங்கமும் யாது என்பதை கண்டறிவதாக காணப்பட்டது.இவ்வாறு கிரேக்க நகர அரச முறைமையின் அரசியலைக் கற்பதனூடாகவே அரசியல் விஞ்ஞானம் ஆரம்பமாகியது. நவீன காலத்தில் தேசிய அரசுகளின் தோற்றம் அதனோடு இணைந்த தேசிய சர்வதேச பரப்புகளில் இடம்பெற்ற அதிகார போராட்டம் என்பவற்றின் விளைவாக அரசியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய சொற்கள் பிரயோகிக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் அரசையும் அரசாங்கத்தையும் பற்றிய கற்கையோடு சுருங்கியிருந்த அரசியல் விஞ்ஞானம் பிற்பட்ட காலங்களில் அரசியல் அதிகாரம்,கொள்கை உருவாக்கம்,அரசியல் செயன்முறையோடு தொடர்பான மூல தத்துவங்கள் ,மோதல் மற்றும் மோதல் முகாமைத்துவம் போன்ற முறைகளை ஆய்வு செய்யக் கூடிய ஒரு துறையாக இன்று அரசறிவியல் காணப்படுகிறது.

அரசறிவில் அணுகுமுறைகளுள் நடத்தைவாத அணுகுமுறை என்பதன் மூலம் கருதப்படுவது.

இது புதியதும் முக்கியமானதுமான அணுகுமுறையாகும்.2ம் உலக போருக்கு பின்னர் முக்கியத்துவம் பெற்றது.இது மரபு சார் அணுகுமுறைகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அரசியல் அறிஞர்களால் தேடி பெறப்பட்ட ஒரு அணுகுமுறையாகும்.அரசியலில் ஈடுபடும் மனிதர்களினதும் மனித குழுக்களினதும் அரசியல் நடத்தையை ஆராய்ந்து அதனூடாக அரசியலை விளங்கிக் கொள்ளும் முறையே இதுவாகும்.இங்கு அரசியல் மனிதனே கருப் பொருளாகும்.கிரகம் வொலஸ் லாஸ்வேல் சால்ஸ் ஈ பெரியம். போன்ற அறிஞர்களும் இவ்வணுகுமுறையை ஆதரித்தவர்களில் முக்கியமானவர்களாகும்.

அரசறிவில் அணுகுமுறைகளுள் பரிசோதனை அணுகுமுறை என்பதன் மூலம் கருதப்படுவது.

இது நவீன அணுகுமுறைகளில் ஒன்றாகும் இயற்கை விஞ்ஞானத்தைப் போன்று ஆய்வு கூடத்திற்குள் ஆய்வு உபகரணங்களை பயன்படுத்தி சில திட்டமிட்ட முறைகளினூடாக அரசறிவியலை ஆய்வு செய்ய முடியாது எனினும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கான விஞ்ஞான ரீதியிலான முறை என்ற வகையில் பரிசோதனை முறையைப் பயன் படுத்தி இன்று அரசியலையும் ஆய்வு செய்யப்படுகிறது. இது அரசறிவியலை விஞ்ஞானமாக மாற்றிய ஒரு அணுகுமுறையாகும்.

அரசறிவில் அணுகுமுறைகளுள் முறைமைப்பகுப்பாய்வு அணுகுமுறை என்பதன் மூலம் கருதப்படுவது.

இது கட்டமைப்புப் பணிப்பகுப்பாய்வு என்று அழைக்கப்படும்.அமெரிக்க ஆய்வாலர்களான ஆல்மன்ட்,டேவிட் ஈஸ்டன் என்போர் இவ்வாய்வு முறையை அறிமுகப்படுத்தினர்.அரசியல் முறையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள கட்டமைப்புகள் அவற்றின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளை மொத்தமாக நோக்கி ஆய்வு செய்வதன் அடிப்படையில் இம்முறை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசு என்றால் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்குள் வாழ்கின்ற மக்கள் தமக்காக சட்டவாக்கலை மேற்கொள்ளும் நிறுவனமாக அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்கிற பொது அந்த மக்களின் மனதில் தோன்றுகின்ற எண்ணமே அரசாகும்.மைக் ஐவரின் கருத்துப்படி – குறிப்பிட்ட நிலப்பரப்பில் உயர்ந்த அதிகாரத்துடன் அரசாங்கமொன்றை அமைத்து அது இடும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் மக்கள் கூட்டமே அரசாகும் என்றார். அரசு என்றால் என்ன என்பது பற்றி அரிஸ்டோட்டில் பிளேட்டோ கார்ணர் லஸ்கி ஹெகல் போன்ற அறிஞர்களும் கருத்துக்களை கூறியுள்ளனர். ஓர் அரசிற்கு இன்றியமையாத 4 அடிப்படை இயல்புகள் உள்ளன. நிலம் மக்கள்தொகை,அரசாங்கம் இறைமை போன்றவையாகும். அரசை மாற்ற முடியாது அரசு நிலையானது கட்புலனாகாதது சர்வதேச அங்கீகாரம் அரசுக்கு உண்டு. மக்கள் அரசுக்கு கட்டுப்பட வேண்டும். ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் அவ்வரசின் உறுப்பினராகும்.

அரசாங்கம் என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசாங்கம் என்றால் அரசின் பொது நோக்கங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதோடு பொது மக்களின் நலநன பேணவும் பாதுகாக்கவும் அரசின் முகவராகவும் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் அரச நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்ளும் அரசுக்கு உருவம் கொடுக்கும் ஒரு நிறுவனமே அரசாங்கமாகும் கார்ணரின் கருத்துப்படி – அரசின் அல்லது மக்களின் விருப்பங்களை கொள்கைகளாக மாற்றுவதன் மூலம் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரும் பிரதிநிதி அரசாங்கமாகும்.என்றார். அரசாங்கமானது அரசியல் வரையறைகளுக்குட்பட்டே தமது அதிகாரத்தை பிரயோகிக்கும்.அரசாங்கம் முத்துறைகளை கொண்டுள்ளது.அதாவது சட்டத்துறை நிர்வாகத்துறை நீதித்துறை ஆகியனவாகும்.இத்துறைகளினூடாகவே அரச அதிகாரத்தை நிலை நாட்டும். அரசாங்கம் இல்லாமல் அரசு செயற்பட முடியாது அரசின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் மூலமே புலனாகும்.சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் அராஜகத்தன்மையை ஒழிக்கவும் சமூக முன்னேற்றத்திற்கும் அரசாங்கம் அவசியமாகும்.அத்தோடு தேசிய கொளரவத்தை பாதுகாத்தல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் சமூக முகாமைத்துவத்தினை மேற்கொள்ளல் போன்றன ஒரு அரசாங்கத்தின் கடைமையாகும்.

சமூகம் என்பதன் மூலம் கருதப்படுவது.

சமூகம் என்பது பொதுவான பண்புகளை கொண்ட ஒரு மக்கள் கூட்டமாகும் இது மரபு மொழி கலாசாரம் இனம் என்பவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் உருவாகலாம்.சமூகம் இயற்கையாக தோற்றம் பெற்றது.சமூகத்தின் நோக்கமானது தமது சமூகத்துக்குறிய அடையாளங்களை பண்பாடுகளை பாதுகாக்கும் நோக்கில் சமூகத்தினை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதாகும். சமூகம் அரசுக்கு முற்பட்டதாகும். சமூகத்தின் ஒழுங்கமைப்பானது கலாசாரம் சமூக அறநெறிகள் சமூக ஒழுக்கம் என்பவற்றினால் ஒழுங்கமைக்கப்பட்டடுள்ளது.சமூகத்தின் சிறிய அலகு குடும்பமாகும்.பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமூகம் உருவாகின்றது.உலகம் முழுவதும் பல சமூகங்கள் பரவிக் கிடக்கின்றன.சமூகமானது முழு சமூக விடயங்களையும் அவதானிக்கிறது.

சங்கம் என்பதன் மூலம் கருதப்படுவது.

சங்கம் என்பது மக்கள் தங்களுடைய பல்வேறு நலன்களை நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கப்பட்டவை ஆகும்.உதாரணமாக கிராமிய அபிவிருத்திச்சங்கம் மாதர் சங்கம் லயன்ஸ் கழகம் போன்றவற்றை குறிப்பிடலாம்.ஒரு சங்கத்தைப் பொறுத்தவரையில் ஒருவர் தான் விரும்பினால் மாத்திரமே சங்கத்தின் உறுப்பினராக இருக்க முடியும் அதே போல் ஒரே சந்தர்ப்பத்தில் பல சங்கங்களில் உறுப்பினராக இருக்கலாம்.அத்தோடு சங்கங்கள் நோக்கங்கள் நிறைவேறியவுடன் கலைந்து விடும் ஆனால் சுய பணிகளிலே ஈடுபடும்.இதன் கடமைகள் குறைவானதாகும் குறைந்த அதிகாரத்தை கொண்டுள்ளது எனலாம்.குறிப்பிட்ட நேக்கங்களை அடைந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே சங்கமாகும்.

தாராண்மைவாதம் என்பதன் மூலம் கருதப்படுவது.

இது ஓர் அரசியல் கோட்பாடாகும். இக்கோட்பாடு முதுலாளித்துவ பொருளாதார மூலக் கொள்;கைகளை அடிப்படையாக கொண்டமைந்தது.தாராண்மைவாதிகளின் கருத்துக்கள் புராதன கிரேக்க கால நகர அரசுகளில் இருந்த போதிலும் 18 ம் நூற்றாண்டிலே ஐரோப்பாவில் அறிமுகமானது. இது தேன்ற நவீன அரசுகளின் தோற்றமும் பிரான்சிய புரட்சியும் காரணமாக அமைந்தது.தாராண்மைவாத கோட்பாட்டாளர்களின் கருத்துப்படி மக்களே அரசை உருவாக்கி கொண்டார்கள்அதாவது ஒரு பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் உருவானது தனிமனிதன் குடும்பமாகி குடும்பங்கள் சமூகமாகி சமூகத்திலிருந்து அரசு தோற்றம் பெற்றது மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அரசை உருவாக்கிக் கொண்டார்கள்.அதாவது சமூகத்தைக் கட்டுப்படுத்தவும் அமைதி ஒழுங்கைப் பேணவும் அரசு தோற்றம் பெற்றதாக கூறுகின்றனர்.இக்கோட்பாட்டின் படி தனி மனித சொத்துரிமை அவர்களின் உரிமைகள் சுதந்திரம் என்வற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.அதே போன்று மனிதன் இருக்கும் வரை அரசும் நிலைத்திருக்கும் என்பது இக் கோட்பாட்டின் கருத்தாகும்.

சோசலிஸம் என்பதன் மூலம் கருதப்படுவது.

சோசலிஸம் என்பது நிலத்தையும் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறைகளில் தனியார் உரிமைக்குப் பதிலாக அவற்றில் சமூக உரிமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தும் ஓர் அரசியல் கருத்தாகும். 18 ம் நூற்றாண்டில் தாராண்மை வாதத்தின் கீழ் தலையிடா அரசு முறைமை காணப்பட்ட காலத்தில் சமூகத்தில் குறைந்த அளவிலானவர்கள் அதிகமான பொருளாதார சலுகைகளை அனுபவித்தனர்.மிக கூடிய தொகையினர் தொழிலாளர்களாகவும் அடிமைகளாகவும் நடாத்தப்பட்டனர் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை செய்தனர் இவ்வாறு முதலாலித்துவ வர்க்கத்தினரால் நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட பாட்டாளி தொழிலாளர் வர்க்கத்தினருக்காக அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தோற்றம் பெற்ற அரசியல் கோட்பாடு சோசிலச வாதமாகும்.இக் கோட்பாட்டை கால் மாக்ஸ் ஏஜ்சல்ஸ போன்ற அறிஞர்கள் நடைமுறைக்குத்தகுந்தவாறு தெளிவு படுத்தினர். கால்மாக்ஸின் கருத்துப்படி – சமூகத்தில் இரு வர்க்கம் இருந்தன முதலாளி , தொழிலாளி என்பனவாகும் முதலாளி வர்க்கம் தமது சொத்துக்களை பாதுகாக்க அரசை ஏற்படுத்திக் கொண்டது அதனை பயன் படுத்தி பாட்டாளி வர்க்கத்தை நசுக்குகிறது.எனவே பாட்டாளி வர்க்கம் ஒன்று சேர்ந்து போராடி முதலாளி வர்க்கத்தின் கையில் இருக்கும் அரசை கைப்பற்ற வேண்டும் அப்போது சமூகத்தில் வர்க்க முரண்பாடு இல்லாது போகும் வர்க்க முரண்பாடு இல்லாத சமூகத்தில் அரசுக்கு தேவை இருக்காது.எனவே எதிர்காலத்தில் அரசு தேய்ந்து அழிந்து போய்விடும் என்றார்.

பாசிஸம் என்பதன் மூலம் கருதப்படுவது.

முஸோலினி பின்பற்றிய கொள்கைகள் பாசிஸம் எனப்பட்டது இது கயஉளைஅ இலத்தீன் சொல்லான pயளஉநள என்பதிலிருந்து பிறந்தது. இதற்கு உறுதியாக கட்டபபட்ட மரக்கட்டு என்பது பொருள்.ஒரு குழு அல்லது கூட்டம் என்ற கருத்தையும் குறிக்கிறது.அரசுக்காக மக்கள் என்ற கருத்தை பாசிஸம் வலியுறுத்துகிறது.பாசிஸம் சோசலிஸத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்க்கின்ற கோட்பாடாகும்.இங்கு தனியாள் சுநத்திரம் என்பதற்கு இடமில்லை.

சட்டத்துறை என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசாங்கத்தின் முத்துறைகளில்சட்டத்துறை முக்கியமானதாகும்.நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதே சட்டத்துறையாகும்.அதாவது நாட்டில் வாழ்கின்ற மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் கொள்கைகளாக மாற்றும் இடமே சட்டத்துறையாகும்.கில் கிறைஸ்ட் என்பவரின் கருத்துப்படி சட்டத்துறை மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும். அம்மக்களுக்கு பொறுப்புச் சொல்லவும் வேண்டும்.நாடு எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்த்து நாட்டின் நல்லாட்சிக்கு துணை செய்யும் நிறுவனமே இதுவாகும்.சட்டத்துறையானது சட்டமியற்றுதல்,நிர்வாகத்துறையை கட்டுப்படுத்துதல்,யாப்பினை திருத்துதல்,மாற்றுதல் போன்ற பல்வேறுபட்ட பணிகளையும் ஆற்றுகின்றது. பொதுவாக சட்டமன்றங்கள் பாராளுமன்றம் என்றழைக்கப்படுகிறது.சட்டமன்றங்கள் ஓரவை ,ஈரவை மன்றங்களாக காணப்படலாம்.

நிர்வாகத்துறை என்பதன் மூலம் கருதப்படுவது.

நிர்வாகத்துறை என்பது சட்டத்துறை இயற்றிய சட்டங்களுக்கேற்ப நாட்டின் நிர்வாகத்தை நடாத்துகின்ற நிறுவனமாகும். பைணரின் கருத்துப்படி பாராளுமன்றம் நீதித்துறை தாபனங்கள் போன்றவை அரசாங்கத்தில் தமக்குறிய பங்கினை பெற்றதன் பின்னர் எஞ்சியவற்றை பெற்றுக் கொள்ளும் மரபு ரீதியான துறை நிர்வாகத்துறையாகும்.என்றார்.
இந்நிர்வாகத்துறையானது
  • நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல்
  • வெளிநாடுகளுடன் உறவுகளை மேற்கொள்ளல்
  • ஊரடங்கு சட்டத்தை நிலை நாட்டல்
  • பகிரங்க சேவையை கட்டுப்படுத்தல்
போன்ற பல பணிகளையும் மேற்கொள்கிறது. அரசறிவியலில் நிறைவேற்றுப் பிரிவு என்பதுஇ அரசொன்றின் அன்றாட நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரமும் பொறுப்பும் கொண்ட அவ்வரசின் ஒரு பிரிவாகும். அதிகாரத்தை அரசின் வெவ்வேறு பிரிவுகளுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பது “அதிகாரப் பிரிப்பு” என்னும் மக்களாட்சியின் மைய எண்ணக்கரு ஆகும். பல நாடுகளில் அரசு என்பது நிறைவேற்றுப் பிரிவையே குறிக்கிறது. அரசின் பல்வேறு அதிகாரக்கள் ஒருவரிடமே குவிந்திருக்கும் வல்லாண்மை முறை, முழுமையான முடியாட்சி போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில், நிறைவேற்றுப் பிரிவு என்று தனியாக ஒன்று இருப்பதில்லை. ஏனெனில் சம அளவான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வெவ்வேறு அரசின் பிரிவுகளுக்கான தேவை எதுவும் இருப்பதில்லை. அதிகாரப் பிரிப்பு என்பது அரசின் அதிகாரத்தை நிறைவேற்றுப் பிரிவுக்கு வெளியே பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். வரலாற்றில் பல முறை நிகழ்ந்ததுபோல் அரசுத்தலைவர்கள் கொடுங்கோன்மை ஆட்சி நடத்துவதைத் தவிர்த்து மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பது இப் பகிர்வின் ஒரு நோக்கமாகும். நிறைவேற்று அதிகாரிக்குச் சட்டங்களை ஆக்கும் அல்லது அவற்றை விளக்கும் அதிகாரமோ பொறுப்போ கிடையாது. சட்டங்களை ஆக்கும் அதிகாரமும் பொறுப்பும்இ சட்டவாக்க சபைக்கும்இ அதனை விளக்கும் அதிகாரமும் பொறுப்பும் நீதித் துறைக்கும் உரியது. சட்டவாக்கசபையினால் ஆக்கப்படுவனவும்இ நீதித்துறையால் விரித்து விளக்கப்படுவனவுமான சட்டங்களை நிறைவேற்றுவதே நிறைவேற்றுப் பிரிவின் பங்களிப்பு ஆகும்.

நீதித்துறை என்பதன் மூலம் கருதப்படுவது.

நீதித்துறை என்பது நிர்வாகத்துறை வரம்புகளை மீறும் போதும் மக்களின் உரிமைகளை மதிக்காத போதும் சட்டசபை மக்களுடைய உரிமைகளில் கை வைக்கின்ற போதும் மக்களுக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கையான நிறுவனம் நீதித்துறையாகும்.நீதிபதிகளை நிர்வாகத்துறை தலைவரே நியமிப்பார்.இதன் பணிகளாக உரிமைகளை பாதுகாத்தல்,சட்ட நிர்வாக துறைக்கு நீதி ஆலோசனை வழங்குதல்,கூட்டாட்சியை பாதுகாத்தல் போன்ற பணிகளை ஆற்றுகிறது.

அரசியல் திட்டம் என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசொன்றின் அரசாங்கத்தின் அமைப்பு அதிகாரம் தொழிற்பாடு ஆகியவற்றையும் அவ்வரசின் எல்லைக்குட்பட்ட மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் அம்மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான உறவுகளையும் தெளிவாக விளக்கும் விதிகளின் தொகுப்பே அரசியல் திட்டமாகும்.அரசியல் திட்டம் என்றால் என்ன என்பது பற்றி பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஜேம்ஸ் பிறைஸ் டைசி, சேர் ஹென்றி மெயின் போன்றோரை குறிப்பிடலாம்.
பிரைஸ் பிரபுவின் கருத்துப்படி
ஒரு அரசின் அமைப்பு அதன் உறுப்புகளிடையே செய்யப்பட்ட அதிகாரப் பகிர்வு அவற்றின் அதிகார எல்லை அதைச் செயற்படுத்த வேண்டிய முறை அரசாங்கத்தின் அமைப்பு அதன் உரிமைகள் இதற்கு மக்களிடமுள்ள கடமைகள் மக்களின் உரிமைகள் போன்ற யாவற்றையும் உள்ளடக்கியதே அரசியல் திட்டமாகும்.

உரிமை என்பதன் மூலம் கருதப்படுவது.

மனிதன் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவன் விரும்பியதை செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்குமெனில் அதுவே உரிமைகள் எனப்படுகின்றன.மனிதன் மனிதனாக வாழ்வதற்கு தேவையான அனைத்தும் உரிமைகளாகும்.சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதனின் நியாயமன கோரிக்கைகள் உரிமைகளாகும்.பேராசிரியர் லஸகியின் கருத்துப்படி மனிதன் தானாகவே பொதுவான வகையில் அடைந்து கொள்ள முடியாதவற்றை தவிர்ந்த சமூக வாழ்க்கை நிலைகள் உரிமைகளாகும் என்றார்.

சுதந்திரம் என்பதன் மூலம் கருதப்படுவது.

ஒரு ஜனநாயக சமூகத்தில் தனிமனித உரிமையை சமூகத்தில் உறுதிப்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பம் சதந்திரம் எனப்படும்.பேராசிரியர் லஸ்கியின் கருத்துப்படி மனிதன் தனது தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு செயற்படுவதற்கு தேவையான சூழல் சுதந்திரமாகும்.சமூகத்தில் பிறருக்கு பாதகம் ஏற்படாதவாறு தனது சமூக பொருளாதார அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு எவ்வித தடைகளுமின்றி வெளி சூழலின் மூலம் கிடைக்கும் சந்தர்ப்பமாகும்.

சமத்துவம் என்பதன் மூலம் கருதப்படுவது.

தமது திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கு தேவையான சூழ்நிலையினை அனைவருக்கும் சமமானதாக உறுதிப்படுத்துவதே சமத்துவமாகும். அனைவரையும் சமமாக கருதுதல் சமூகத்தின் அனைத்து வளங்களையும் அனைவர் மத்தியிலும் சமமாக பங்கிடுதல் சமூகத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசியல் பால் கட்சி காரணமாக யாருக்கும் விசேட சலுகைகள் வழங்காமலிருத்தல்.சமத்துவமாகும்.

சட்டம் என்பதன் மூலம் கருதப்படுவது.

ஒரு சமூகத்தில் பொது நலநன பாதுகாக்கும் நோக்கில் இறைமை அதிகாரத்தைப் பயன் படுத்தி அரசின் மூலம் வெளியிடப்படும் ஆணைகளும் பிரமானங்களும் சட்டம் எனப்படும்.சட்டம் என்றால் என்ன என்பது தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் கருத்து முன்வைத்துள்ளனர்.எல்மன்ட் கிறீன் வில்சன் ஹொப்ஸ் N;பான்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வூட்றோ வில்சனின் கருத்துப்படி சட்டம் என்பது என்பது அரசின் அதிகாரத்தையும் வலிமையையும் பக்கபலமாக கொண்டு ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தெளிவான வழிமுறையாகும் என்றார்.

வலு வேறாக்கம் என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசாங்கம் ஒன்றின் பிரதான துறைகளான சட்டத்துறை நிர்வாகத்துறை நீதித்துறை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வகையிலும் ஒன்றின் மீது ஒன்று தலையீடோ கட்டுப்பாடோ செலுத்தாத வகையிலும் அமைந்திருப்பதே வலு வேறாக்கம் எனப்படும்.இக்கோட்பாட்டை முன்வைத்தவர் மொன்டஸ்கியூ எனும் அறிஞராவார்.

இறைமை என்பதன் மூலம் கருதப்படுவது.

இறைமை என்பது நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றுவதற்க்கும் அமுல்படுத்துவதற்கும் அமுல்படுத்தும் வேலை எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கும் ஓர் அரசுக்குள்ள சுதந்திர அதிகாரமே இறைமையாகும். இவ்விறைமையை ஒரு தனி நபரிடமோ அல்லது குழுவிடமோ காணலாம்.ஜனநாயக அரசுகளில் சட்டங்களினூடாக இறைமை பிரயோகிக்கப்படுகிறது.சர்வாதிகார அரசுகளில் சர்வாதிகார அரசனூடாக இறைமை பிரயோகிக்ப்படுகிறது.இது பற்றி வில்சன் பேகஸ் வில்லோபி டூகிட் போன்ற அறிஞர்க்ள கருத்து தெரிவித்துள்ளனர்.ஓர் அரசு மக்களின் மீதும் அம்மக்களின் நிறுவனங்கள் மீதும் செலுத்துகின்ற தனியானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமையாகும் என்று பேகஸ் குறிப்பிடுகின்றார்.இறைமைக் கோட்பாட்டை பலர் முன்வைத்த போதும் போடின் ஹொப்ஸ் ரூஸோ ஒஸ்ரின் போன்றவர்கள் இவர்களுள் முக்கியமானவர்களாகும்.ஜீன் போடினின் கருத்துப்படி எவ்வித சட்டத்திற்க்கும் கட்டுப்படாமல் நாட்டு மக்களை கட்டுப்படுத்த முடியுமான அரசிடம் காணப்படும் உயர்ந்த அதிகாரம் இறைமையாகும் என்றார்.

வரையறுக்கப்பட்ட அரசு என்பதன் மூலம் கருதப்படுவது.

(ஆங்கிலம் Limited govrnment) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அரசு என்பது ஒரு அரசின் அதிகாரம் இயன்றவரை சிறிதாக அல்லது வரம்புக்குட்பட்டதாகவும்இ தனிமனிதச் சுதந்திரத்திலும் பொருளாதாரத்திலும் தலையிடாமலும் அமைவதையும் குறிக்கிறது. இக் கருத்துரு மேற்கு நாடுகளில்இ குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் முக்கியமான ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்க அரசமைப்புச் சட்டம் அரசின் பல எல்லைகளை வரையறை செய்கிறது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதன் மூலம் கருதப்படுவது.

அதாவது மக்கள் நேரடியாக ஆட்சியில் பங்குபற்றாது தங்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் ஆட்சியில் ஈடுபடுவதையே குறிக்கிறது.சகல மக்களும் செயலாற்றும் உரிமைகள் ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு அக்குழு எல்லா மக்களுக்கும் பொதுவாக செயலாற்றுகின்றது.அக்குழுவை தெரிவு செய்யும் முறையே பிரதிநிதித்துவ முறையாகும்.மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அரசாங்கத்துக்கு அனுப்பி அவர்களினூடாக தமது அதிகாரங்களையும்உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றனர்.காலத்துக்கு க்காலம் நடைபெறும் தேர்தல் மூலமாக தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்கின்றனர்.

நேரடி ஜனநாகம் என்பதன் மூலம் கருதப்படுவது.

ஒரு ஜனநாயக சமூகத்தில் மக்கள் நேரடியாக சட்டம் இயற்றுவதில் சம்பந்தப்படுவார்களாயின் அது நேரடி ஜனநாயகம் எனப்படுகிறது.இது ஒப்பங்கோடல் குடிமுனைப்பு மீள அழைத்தல் என்பவற்றின் மூலம் நடைபெறுகிறது. அது புராதன மக்களிடம் காணப்பட்ட மக்களாட்சிக் கோட்பாடாகும்.அதாவது ஒப்பங்கோடல் என்பது ஒரு நாட்டின் சட்டவாக்க விடயங்களில் மக்கள் பங்கு கொள்வதே ஒப்பங்கோடலாகும்
உ+ம் : யாப்பைத்திருத்துதல்
குடிமுனைப்பு என்பது
சட்டங்களை ஆரம்பித்து வைக்கும் உரிமையை மக்கள் பெற்றிருப்பதாகும்.அதாவது நடைமுறையிலுள்ள சட்டங்களை திருத்துவதற்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் ஆகும்.
மீள அழைத்தல்
என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சரிவரக் கடமையாற்றாத போது அவர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு இருக்கும் அதிகாரமாகும்.

அரசியல் கட்சி என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசியல் கட்சி என்றால் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஒரே கொள்கையை உடையவர்கள் ஒன்று சேர்ந்து அமைத்துக் கொள்ளும் ஒரு குழுவாகும்.ஒரு பொதுவான அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டின் கீழ் ஒன்றினைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போராடி அதிகாரத்தைப் பெற்றதன் பின்னர் தமது அரசியல் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாக கொண்ட மக்கள் குழுவே அரசியல் கட்சி எனலாம்.மைக் ஐவர் என்பவர் இது பற்றிக் கூறும் போது அரசியல் திட்டத்தின் படி கொள்கைகள் மூலம் அரசாங்கத்தை நடாத்த விளையும் கூட்டமே அரசியல் கட்சி என்றார். டிஸ்ரேலியின் கருத்துப்படி ஒழுங்கு படுத்தப்பட்ட அபிப்பிராயங்களை கொண்டுள்ள நிறுவனமே கட்சியாகும் என்றார். அரிசியல் கட்சியின் பணிகளாவன…பொது நல பணிகளில் ஈடுபடல்,மக்கள் கருத்துக்களை ஒன்று சேர்த்தல்,பலமான எதிர் கட்சிகளை உருவாக்கல்,போன்ற பணிகளை செய்கிறது.நவீன உலகில் அரசியல் கட்சிகள் ஒரு கட்சி முறை இரு கட்சி முறை பல கட்சி முறை என வகைப்படுத்தப்படுகின்றன.

அமுக்கக் குழு என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசியலில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்தும் குழுக்களே அமுக்கக் குழுக்களாகும் தொழிற் சங்கம் வியாபார நிறுவனம் பெண்கள் அமைப்பு என்பவற்றை அமுக்கக்குழுக்களுக்கு உதாரணமாக கூறலாம்.அதாவது ஆசைக்குழுக்கள் என்றும் இது அழைக்கப்படுகிறது.ஒரு அரசியல் சமூகத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் ஏதுமின்றி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சில அழுத்தங்களை கொடுப்பதன்; மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள ஒன்று சேர்ந்திருக்கும் குழுக்கள் அமுக்கக் குழுக்களாகும். H சிக்லர் என்பவர் அரசியலில் ஈடுபடாத எனினும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கும் குழுக்களாகும்.இக்குழுக்கள் ஆர்பாட்டங்கள் சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் ஊர்வலம் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். .இது ஜனநாயகத்தின் வெற்றிக்கு மிக அவசியமான ஒன்றாகும்.

பொதுசன அபிப்பிராயம் என்பதன் மூலம் கருதப்படுவது.

அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் அரசியல் ரீதியாக முக்கியத:துவம் மிக்க நிகழ்வுகள் என்பன பற்றி பொதுமக்கள் கருத்துக்களின் பொதுமைப்படுத்தப்பட்ட நிலையே பொதுசன அபிப்பிராயமாகும். பரிஸ் என்பவரின் கருத்துப்படி சமுதாயத்தை பாதிக்கின்ற மக்களுக்கு விருப்பமான ஒரு பிரச்சினையைப்பற்றி நாட்டிலுள்ள மக்களின் பல பிரிவினரும் கொண்டிருக்க பொதுக் கருத்தே பொதுசன அபிப்பிராயமாகும்.பொதுசன அபிப்பிராயம் உருவாகுவதில் குடும்பம் கல்வி சமயம் புத்தகங்கள் அரசியல் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் என்பவை செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியத்துவம் குறைந்த ஒரு சிறு நிகழ்ச்சி பற்றி பலம் வாய்ந்த பொதுசன அபிப்பிராயம் தோன்றலாம்.

பொதுத்துறை நிர்வாகம் என்பதன் மூலம் கருதப்படுவது.

பொது நிர்வாகம் எனப்படுவது பொது மக்களின் நலனுக்காக சட்டத்துறை இயற்றிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிர்வாகத்துறை மேற் கொள்ளும் எல்லா செயல்களும் பொது நிர்வாகமாகும். பொது நிர்வாகம் மக்களின் நலனையும் அபிவிருத்தியையும் வழியுறுத்துகின்றது.
வூட்ரோ வில்சன்:- பொது சட்டத்தின் முழுமையான முறையான செயலாக்கம்
சைமன் :- பொதுவான இலக்குகளை அடைந்து கொள்ள ஒத்துழைக்கும் குழுச் செயற்பாடு என்றார்.

பொதுக் கொள்கை என்பதன் மூலம் கருதப்படுவது.

பொதுக் கொள்கை என்பது பொது மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை திட்டங்களாக உள்ளது. சுறுக்கமாக கூறின் பொதுக் கொள்கை என்பது அரசாங்கத்தினால் ஒரு பிரச்சினை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் முடிவாக உள்ளது.
தோமஸ் டை:- அரசாங்கம், செய்வதற்கு அல்லது செய்யாமல் விடுவதற்கு தீர்மானிக்கின்ற அனைத்தும் பொக் கொள்கையாகும் என்றார்.
இக்கொள்கை உருவாக்குபவர்கள் அரசியல் வாதிகள் சிவில் சேவையாளர்கள் பாராளுமன்ற உறுப்பிர்கள் போன்றோரை குறிப்பிடலாம் இதன் நோக்கம் பொது பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுத்தலாம். பொதுக் கொள்கையில் மக்கள் அபிப்பிராயம் பகுத்தறிவு அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

மோதல் முகாமைத்துவம் என்பதன் மூலம் கருதப்படுவது.

மோதல் முகாமைத்துவம் மோதல் தீர்விற்கான வழியை தேடாமல் மோதலினை தவிர்க்கும் முறையையும் வேண்டாது மோதலினை கட்டுப்படுத்தி சமாலிக்கும் சில வழிவகைகளை செய்தல் முகாமைத்துவமாகும். மோதல்கள் எல்லா சமூகத்திலும் காணப்படும் பொதுவானதொன்றாகும்.மோதல்களை இல்லாது ஒழிக்க முடியாது அதே நேரம் அதன் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் இதனையே மோதல் முகாமைத்துவம் என்கின்றார்கள்.மோதலினை இரண்டு வகையாக கட்டுப்படுத்தலாம்
  1. குறிப்பிட்ட எல்லைக்குள் மோதல் கட்டுப்படுத்தப்படல்
  2. மோதலினை நேர்நிலையாக நோக்குவதாகும்.

மோதல் என்பதன் மூலம் கருதப்படுவது.

மோதல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி நபர்கள் தரப்புகள் அல்லது நாடுகளுக்கிடையிலான உடன்பாடின்மையை குறிக்கிறது.உதாரணமாக பெற்றோர் பிள்ளை கணவன் மனைவி என்பவர்களுக்கிடையில் மோதல் ஏற்படலாம்.
கிறிஸ்தோபர் மிச்சேல் :- ஒத்துவராத இலக்குகளை கொண்டிருக்கின்ற அல்லது கொண்டிருப்பதற்காக நினைக்கின்ற இரண்டு அல்லது பல தரப்புகளிடையே காணப்படும் உறவே மோதல் என்றார்.
மோதல் ஏற்பட பலவீனமான அரசுகள் பாரபட்சமான அரசியல் நிறுவனங்கள் குழுவாத அரசியல் உயர் குழாம் அரசியல் பொருளாதார பிரச்சினைகள் பொருளாதார முறைமை என்பவையே காரணமாக அமைகின்றன.
மோதல் என்பது confliger எனும் கிரேக்க சொல்லிலிருந்து பிறந்தது.

சர்வதேச சட்டம் என்பதன் மூலம் கருதப்படுவது.

சர்வதேச சட்டம் என்பது சர்வதேச முறைமையில் அரசுகள் ஒன்றுடனொன்று தொர்பு கொள்ள வரும் போதும் அவற்றுக்கிடையிலான உறவுகள் மற்றும் தொடர்புகளை ஒழுங்கு படுத்தும் அவற்றின் உரிமைகள் கடமைகள் பற்றி குறிப்பிடுவதுமான விதிகளின் தொகுதி ஆகும்.சர்வதேச சட்டம் என்பது தேசங்களின் சட்டம எனவும் அழைக்கலாம்.

உலக அரசு அல்லது உலக அரசாங்கம் (World government)

முழு மனித குலத்திற்குமான ஒரு தனி, பொதுவான அரசியல் அதிகாரமாகும். இது ஐரோப்பாவில் உருவான குறிப்பாக பண்டைய கிரேக்க மெய்யியல் எண்ணக்கரு ஆகும். உரோமைப் பேரரசின் அரசியல் அமைப்பு மற்றும் திருத்தந்தை பிரதிநிதித்துவப்படுத்திய சமய அதிகாரத்திற்கும், சமயம் சார புனித உரோமைப் பேரரசுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி என்பனவும் இவ்வெண்ணக் கருவிற்கு மூல காரணங்களாகும். முடியாட்சி என்று அர்த்தப்படும் நூல் இலத்தீன் மொழியில் டான்டே அலிகியேரி என்பவரால் எழுதப்பட்டு இவ்விடயத்திற்கு ஊக்கம் கொடுத்தது.
ஐக்கிய நாடுகள் அல்லது ஐநா அல்லது யூஎன் என்பது நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல் கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல் இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரைஇ இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா ‘சமாதான விரும்பி’ நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படிஇ 192 உறுப்புநாடுகள் உள்ளன.

நீதிப்புணராய்வு என்பதன் மூலம் கருதப்படுவது.

ஒரு நாட்டின் கொள்கைகளை சட்டமாக வெளியிடுவதே சட்டத்துறை யாகும் பாராளுமன்றம் இயற்றும் சட்டங்கள் நாட்டிற்கு பொறுத்தமானதா இல்லையா அந்நாட்டின் அரசியல் யாப்பிட்கு உட்பட்டதா இல்லையா என ஆய்வு செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு உண்டு இவ்வதிகாரமே நீதிப்புணராய்வு அதிகாரம் எனப்படும்.

அதிகாரப் பகிர்வு என்பதன் மூலம் கருதப்படுவது.

ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தை பிரயோகிப்பதில் மத்திய அரசு மட்டுமன்றி பிரதேச அரசுகளும் பங்கு பற்றும் வகையில் அதிகாரம் யாப்பின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதே அதிகாரப் பகிர்வு ஆகும்.அதிகாரப் பகிர்வான யாப்பு சமஷ்டி ஆட்சி யாப்பு எனப்படும். அதிகாரப் பகிர்வானது பிரதேச ரீதியிலும் பணி ரீதியிலும் மேற் கொள்ளப்படும்.பிரதேச ரீதியில் அதிகாரப் பகிர்வில் அரசு சில அரசியல் அலகுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொறு அலகுக்கும் ஒரு அரசாங்கம் அமைத்து கருமங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்படுதல்
பணி ரீதியில் அதிகாரப் பகிர்வு என்பது அரசாங்கத்தின் பணிகளை பிரித்துக் கொடுப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும்.இதனால் அதிகாரம் ஒருவரிடத்தில் குவிக்கப்படுவதை தடுக்கலாம்.அத்தோடு சட்ட நிர்வாக நீதி அமைப்புகளில் வலு வேறாக்கம் செய்யப்படும்.

தேசிய இயக்கம் என்பதன் மூலம் கருதப்படுவது.

தேசிய இயக்கம் என்பது காலணித்துவத்துக்குட்பட்ட ஒரு நாட்டில் வாழும் மக்கள் இன மத மோழி பேதங்களை மறந்து ஒற்றுமையாகி தேச விடுதலையையும் ஒற்றுமையையும் அடைந்து கொள்ளும் நோக்கத்துடன் போராடுவதற்காக ஒன்று சேர்ந்து இயங்கும் இயக்கம் தேசிய இயக்கம் எனப்படும்.1919 களில் தேசிய இயக்கம் எனும் பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.முதலாவது தலைவராக சேர் பொன் அருணாச்சலம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சமூக இயக்கம் என்பதன் மூலம் கருதப்படுவது.

சமூகத்தில் தோன்றும் இயக்கங்கள் உதாரணமாக மதவிடுதலை இயக்கம் கலால் இயக்கம் இடது சாரி இயக்கம்.

கூட்டாட்சி என்பதன் மூலம் கருதப்படுவது.

பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (Government sytem) கூட்டாட்சி (இலங்கை வழக்கு:சமஷ்டி) (Federal system) ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும். கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும்இ அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பு சட்டம் கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும்இ கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். இந்தியாஇ கனடாஇ ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

ஒற்றையாட்சி சமஷ்டி

ஆட்சிப்பொறுப்பு (அதிகாரம்) நடுவே குவிந்திருப்பது ஆட்சிப்பொறுப்பு பன்முகப்படுத்தப்பட்ட அரசமுறை நடுவண் அரசு மட்டுமே காணப்படும் நடுவண்-மாநில அரசுகள் காணப்படும்.முழு நாட்டின் மீதும் நடுவணரசு மேலான்மை செலுத்தும் மாநில அரசுகள் தமது பரப்பினுள் தன்னுரிமையுடன் செயற்படும்

சமசம சமஷ்டி (கூட்டரசு)

அரசியல் யாப்பினுடாக மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சட்ட மன்றத்திடமே எல்லா அதிகாரங்களும் காணப்படும். இரு மன்றம் காணப்படும் சட்டங்கள் அதிகளவில் வேறுபட்டு காணப்படும். மத்திய அரசே இறைமையின் உறைவிடம்.சட்டங்கள் நாடு முழுவதற்கும் பொதுவானது. நாட்டின் இறைமை மத்திய மாநில நிர்வாக மட்டத்தில் நன்மைகள் காணப்படும். அரசுகளிடம் காணப்படும்.தேசிய ஒருமைப்பாடு பேணப்படும். நிர்வாக சிக்கல்கள் கணப்படும். பலமான அரசாக இருக்கும். ஒருதலை ஆட்சிக்கு முற்றிலும் மாற்றமான ஒன்றாகவே கூட்டரசு முறை விளங்குகிறது.
கூட்டரசு முறையானது
பொது நன்மையை அடைய விரும்பிய நாடுகள் ஒன்றிணைவதன் மூலம் குறிக்கப்பட்ட அரசொன்றின் நிலப்பகுதிக்குள்ளான ஒரு இனக்குழுவினதோ அல்லது இனங்களினதோ தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இடமளிக்கும் வகையிலும் உருவாக்கப்படும். இன்று உலகில் மக்கள் வாழும் நிலப்பரப்பல் ½ பங்கிற்கும் மேற்பட்டவை கூட்டரசு முறைக்கு உட்பட்டவையாகும்.மேலும் கூட்டாட்சி என்னும் போது நடுவண் அரசாங்கத்தையும் மாநில அரசாங்கத்தையும் ஈடான(சம) உரிமை கொண்ட அரசாங்கங்களாக கருதி ஒன்றுக்கொன்றான உறவு நோக்கிலன்றி ஒன்றினுடைய கட்டளைக்கு மற்றொன்று அடங்கி நடக்கும் நிலையைத் தவிர்த்து தன்னுரிமையான (சுதந்திரமான) முறையில் இரு அரசாங்கங்களும் தமது ஆட்சிப்பொறுப்பு (நிர்வாக) எல்லைக்குள் ஆட்சி செலுத்தும் ஒரு முறையென சுருக்கமாக கூறலாம்.
உலகில் இந்நிலைக்கு மாறான இரு வேறு நிலைகளில் கூட்டாட்சி இயங்குவதைக் காணலாம்.
  1. நடுவண் அரசின் அதிகாரம் முதன்மை பெற்ற கூட்டாட்சி
  2. மாநில அரசாங்கத்தின் ஆட்சியுரிமை வலுப்பெற்ற கூட்டாட்சி
அத்தோடு ஒருதலையாட்சி கூட்டரசு ஆட்சி இரண்டினதும் பண்புகள் இணைந்த வகையில் காணப்படும் பாதி கூட்டரசு அல்லது குறைகூட்டு ஆட்சி முறைகளும் காணப்படுகிறது.எடுத்துக்காட்டாக
தென் ஆப்பிரிக்கா
இந்தியா- நடுவண் அரசின் தலையீடு ஒருதலையாட்சியின் சாயல் அதிகம்
ரசியா- செருமனி -நடுவண் அரசு மாநில அரசிற்கு கட்டுப்படவேண்டிய நிலை அதிகம்.

எனும் மாநிலம் –அதிக மக்கள்தொகையையும் பெரிய நிலப்பரப்பையும் கொண்டதால் நடுவண் அரசையே கட்டுப்படுத்தும்.எந்த ஒரு அரசின் மத்திய அரசும் மாநில அரசுகளும் நாட்டின் இறைமையை தமக்குள் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்றை மற்றையது கட்டுப்படுத்தாமல் அவற்றுக்கென அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நின்று தன்னுரிமையுடன் (சுதந்திரமாக) செயற்படுகின்றனவோ அதவே கூட்டரசு முறையாகும்.ஆகவே கூட்டரசு முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.

அரசியல் கலாசாரம்

அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மனித சமூகத்தில் அரசியல் பிராணிகள் என்ற வகையில் மக்களின் நடத்தைகளினூடாக வெளிப்படும் அரசியல் விழுமியங்களே அரசியல் கலாச்சாரமாகும்.நாட்டிலுள்ள மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை மனப்பாங்குகள் பெறுமானம் என்பவையே அரசியல் கலாச்சாரமாகும்.

அரசியல் வன்முறை

இனவாதத்தை நிறுவனமயப்படுத்தலே வன்முறையாகும் அரசியல் வன்முறை என்பது ஒருவரின் சமூக நடத்தை முறையாகும் இந்த வன்முறை அரசியல் ரீதியாக இடம் பெறுமாயிறுந்தால் அதனை அரசியல் வன்முறை எனப்படும்.

அரசியல் நடத்தை

அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த ஒரு சமூகத்தில் தனியாட்கள் அங்குள்ள அதிகாரப் பீடங்களுடன் இணைந்து செயற்பட்டு அதிகாரப் பீடங்களை சுற்றி நடந்து கொள்ளும் விதம் அரசியல் நடத்தை எனப்படும்.

அரசியல் சமுதாயப்படுத்தல்

மனிதர்கள் அரசியல் மயமாகி அரசியல் நடத்தைகளை வெளிப்படுத்துவதற்குறிய அரசியல் அறிவை பெற்றுக் கொள்ளும் முறையே அரசியல் சமுதாயப்படுத்தலாகும்.

அரசியல் உயர் குழாம்

எந்தவொறு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்திலும் அரசியல் செயலொழுங்கிற்குத் தலைமை தாங்கும் மக்கள் குழு அரசியல் உயர குழாம் எனப்படும்.

நல்லாட்சி

தேசிய அரசுகளால் ஆனதும் மக்களது சமாதானமானதும் ஒழுங்கானதும் பகுத்தறிவுடன் கூடியதுமான செழிப்பானதுமான பங்கு பற்றலுடன் கூடிய வாழ்க்கைக்காக மேற் கொள்ளும் செயன் முறையாகும்.

சிவில் சமூகம்

அரசாங்கம், குடும்பம் சந்தை தாபணங்கள் ஆகிய மூன்றையும் தவிந்த சமூகத்தில் செயற்படும் சகல சமூகத் தானங்களின் கூட்டு மொத்தமே சிவில் சமூகம் எனப்படுகின்றது.

தேசம்.

மொழி ,மதம்,இனம்,ஐக்கியப்பாடு,கலாசாரம்,அரசியல் உணர்வு போன்ற பண்புகளையும் தேசிய கொடி தேசிய கீதம் இறந்த கால வரலாறு என்பவற்றையும் கொண்ட மக்கள் குழுவே தேசமாகும்.

தேசியம்

ஒரே மொழி இனம் சமயம் வரலாறு இலக்கியம் பொருளாதார நலன் அரசியல் நாட்டம் ஆகிவைகளைக் கொண்ட மக்களிடம் காணப்படும் உணர்வே தேசியமாகும்.

தேசிய வாதம்

குறித்த நிலப்பரப்பில் வாழ்கின்றவர்கள் கலாசா பண்பாட்டு விழுமியங்களை தம்மிடையே பகிர்ந்து கொண்டு இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று தங்களுடைய நாட்டின் விடுதலைக்காக உழைப்பதே தேசியவாதமாகும்.

யாப்புறுவாதம்

அரசியல் யாப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டை ஆட்சி புரிவதே யாப்புறுவதமாகும்.

சட்டவாட்சி

சட்டத்தின் மூலம் செயற்படுகின்ற ஆட்சி முறையே சட்டத்தின் ஆட்சி ஆகும் ஆள்வோரும் ஆளப்படுவோரும் சட்டத்தின் கீழ் சமனானவர்கள்.

முகாமைத்துவம்

பொதுக் கொள்கைகளை நடைமுறை படுத்துகையில் பயண்படுத்தப்படும் பொளதீக மனித வளங்கள் மூலம் உச்ச பயனை பெறுவதாகும்.

கூட்டு சமஷ்டி அல்லது நேசக் கூட்டமைப்பு ஆட்சி

பல அரசுகள் ஒன்றிணைந்து சில பொதுவான மட்டுப்படுத்தபபட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக பொது அரசொன்றை உருவாக்குவதே கூட்டு சமஷ்டி ஆகும்.

கலப்பு அரசாங்கம்

பாராளுமன்ற அரசாங்க முறையையும் ஜனாதிபதி அரசாங்க முறையையும் இணைத்துக் கொண்ட ஒரு அரசியல் மாதிரியே கலப்பு அரசாங்கமாகும்.

கலப்புத் தேர்தல்

ஒரு தொகுதி, சாதாரண பொரும்பான்மை முறைகள் கொண்ட தேர்தல் மூலமும் ஏனைய பிரதேசம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகள் கொண்ட தேர்தல் மூலமும் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவர்.இதுவே கலப்பு தேர்தல் முறையாகும்.இது ஜெர்மன் தேர்தல் முறை என்றும் கூறப்படும்.

அரசியல் அதிகாரம்

அதிகாரம் என்பது மனித உறவுகளுடன் தொடர்பு பட்ட செயற்பாட்டு வடிவமாகும் அதாவது இணக்கம் போட்டி,கீழ்படிவு,கட்டுப்பாடு என்பவற்றின் மூலமாக ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ ஏனையவர்களின் நடவடிக்கைகள் மீது செல்வாக்கு செலுத்துதல் அதிகாரம் எனப்படும்.

உள்ளூராட்சி

ஒரு நாட்டின் அபிவிருத்தி,இனப்பிரச்சினை காரணமாக நாட்டை சிறிய அலகுகளாக பிரித்து அங்கு ஆட்சி நிறுவுதல் இம்முறையே உள்ளூராட்சி எனப்படும்.

நல்லாட்சியின் தற்கால தேவையும், முக்கியத்துவமும்.



 

நல்லாட்சித்தத்துவத்தின் ஆரம்பக்கால நிலை, அறிஞர்கள் மத்தியில் அதன் செல்வாக்கு, பண்புகள், சிறபம்சங்கள் போன்றன மற்றுமன்றி நல்லாட்சியின் தற்கால முக்கியத்துவம், வலியுறுத்துவதற்கான காரணங்கள், நவீன
ஜனநாயக முறையில் இதன் செல்வாக்கு, மூன்றாம் உலக நாடுகளில் இதன் நிலைபோன்ற விடயங்களை தொகுத்துப் பார்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்றைய நவீன ஜனநாயக உலகில் பல நாடுகள், சர்வதேச நிறுவனங்கள், பொதுநல அமைப்புக்கள் போன்ற பல ஸ்தாபனங்களில் பேசப்படுவதும், அபிவிருத்தி, இறையாண்மை போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவமாகவும், ஜனநாயகத்தின் மற்றுமோரு பரிணாமமாகவும் பேசப்பட்டு வருகின்ற ஓர் எண்ணக் கருவே நல்லாட்சியாகும். ஆட்சிப் பற்றிய எண்ணக்கருவானது புதிதல்ல. இது மனித நாகரிகத்தின் வெளிப்பாடு. தீர்மானம் எடுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்ற செயற்பாடே ஆட்சி என எளிமையாக கூறலாம். இதே அடிப்படையில் வளர்ச்சிப் பெற்ற ஒரு சிந்தனையே நல்லாட்சி. இதனை ஆங்கிலத்தில் 'புழழன புழஎநசயெnஉந' என்று அழைக்கலாம். இதன் பொருள் 'மக்கள் நலன் பேணும் நல்ல் அரசு' என்பதாகும். மக்கள்; உரிமைகள்,சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து ஓர் அரசின் கீழ்வாழும் போது, அவ்வரசானது அம்மக்களது தேவைகளை பூர்த்தி செய்யுமிடத்து அம்மக்களின்; உள்ளத்தில் தோன்றும் ஓர் எண்ணமே நல்லாட்சியாகும்.
ஆரம்பக்கால அறிஞர்களும் நல்லாட்சிப் பற்றி சிந்தித்துள்ளனர். 'அறிவடையோர்,பொதுநலனை நோக்காக கொண்டோர் ஆளும்போது அவ்வாளப்படும் சமூகத்தில் நல்லாட்சி நிலவும்' என்ற பிளேட்டோ கருதினார். அரிஸ்டோடில் 'நடுத்தர வர்க்கத்தினர் ஆளும்பொதே நல்லாட்சி நிலவ முடியும் ஏனெனில் அவர்களே ஐக்கியத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்' என்று கருதியுள்ளார். ஓராட்சி நல்லாட்சியாக அமைய வேண்டுமாயின் ஆளுபவன் பலம்மிக்கவனாகவும், அதிகாரம் கொண்டவனாகவும், வீரம். தந்திரம் போன்றன உடையவனாக இருக்க வேண்டும் என மாக்கியாவல்லி கருதியிருந்தார். அதன்படி நல்லாட்சி பழமையானதொன்று. ஓர் அரசு நிலைத்திருக்க ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் சுமுகமான உறவு காணப்பட வேண்டும் இதனை வழங்குவதே நல்லாட்சி.

நல்லாட்சியின் பிரதான அம்சங்கள் 

நல்லாட்சியின் பிரதான அம்சமாக அல்லது பண்பாக பன்வருவன காணப்படுகின்றன. இவை காணப்படுமிடத்தே நல்லாட்சி நிலவுவதை அறியக்கூடியதாக இருக்கும்.
1. பங்கேற்பு
2. சட்வாட்சி நிலவுதல்
3. பொறுப்புக் கூறுதல்
4. வெளிப்பட தன்மை
5. துலங்கும் தன்மை
6. செயற்திறன்,வினைத்திறன்
7. நியாயமான அல்லது பாரபட்சமற்றத்தன்மை.
8. நீதித்துறை சுதந்திரம்
பங்கேற்பு:- ஒரு நாட்டின் எல்லா சமூகங்களையும் இணைத்தவகையில் தீர்மானம் எடுத்தல், கொள்கை உருவாக்கல் இடம்பெற வேண்டும். ஆண பெண்,சிறுபான்மை பெரும்பான்மை போன்ற பாகுபாடுகள் காணப்படக் கூடாது என்பதோடு, சிவில் சேவை, அனைத்து அரசியல் கட்சிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றையும் கொள்கை உருவாக்கத்தில் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

சட்டவாட்சி நிலவுதல்:- 'சட்டத்தின் முன் அனைவரும் சமன்' என்பதையெ சட்டவாட்சி உணர்துகின்றது. இதனை முன்வைத்தவர் பேராசிரியர் டைசியாவாரர். ஆள்வோர் ஆளப்படுவோர் அனைவரையும் சமனாக கருதுவதே இதன் கொள்கை. நல்லாட்சி நிலவுவதில் இவ்சட்டவாட்சி முக்கிமானதொன்றாகும். 

பொறுப்பு கூறுதல்:- ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருவரும் தமக்குத் தரப்பட்ட பகுதியில் பொருறுப்புக் கூறக்கூடியவ்களாக இருக்க வேண்டும். குறிப்பாக இன்றைய பிரதிநிதிதவ ஜனநாயகத்தில் ஆள்வோர் ஆளப்படுவோருக்கு பொறுப்புக் கூறுதல் கட்டாயமாகும். அப்போதுதான் சுமுகமான உறவு காணப்படும்.
வெளிப்பட தன்மை:- ஒரு ஆட்சிப் பகுதியில் நிலவும் சகல விடயங்களும் சமூகத்திற்கு தெளிவாக விளங்க வேண்டும். இதில் அரச நலன்கருதி செய்யப்படும் இராஜதந்திர செயற்பாடகள் விதிவிலக்கானவை. தவிர சட்டவாக்கம், பொருளாதார முடிவுகள், அறிக்கைகள், ஒப்பந்தங்கள், திட்ட மதிப்பாய்வுகள் போன் அனைத்தும் சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட வேண்டும். 

துலங்கும் தன்மை:- சமூகத்தில் காணப்படும் அனைவரும் செயற்பட வேண்டும். ஒரு சாராரேனும் ஒதக்கி வைக்கப்படக் கூடாது. மக்களின் தேவைகளையுணர்ந்து ஆடசியாளர்கள் செயற்பட வேண்டும். 

செற்திறன்,வினைத்திறன்:- வளங்கள் சீரான முறையில் பங்கிடப்பட்டு அதன் மூலம் சிறந்த பயனை அடைவதையே இது குறிக்கின்றது. அருமையாகக் கிடைக்கும் வளங்கள் வீண்விரயமாக்கப்படாது, அவை அனைவருக்கும் சமமான முறையில் பங்கிடப் படுவதையே குறிக்கின்றது.

பாரபட்சமற்றத் தன்மை:- ஓர் அரசின் கீழ் வாழும் மக்கள் அனைவரும் ஒரேபார்வையின் கீழ் பார்க்கப்படுதல் வேண்டும். இன, மொழி, மத பாகுபாடின்றி சட்டத்தின் முன், வளப்பங்கீட்டின் போது அனைவரும் சமனாக நோக்கப்படுதல் வேண்டும். 

நீதித்துறை சுதந்திரம்:- நீதித் துறையானது சட்ட, நிர்வாக துறைகளின் தலையீடு இன்ற காணப்படுதல் வேண்டும். இதில் நீதிபதிகளின் நியமனம்,சேவை பாதுகாப்பு, சம்பளம் போன்றன அரசியல் தலையீடுகள் இன்றி காணப்படுதல்.
இவ்வாறான பண்புகளுடன் அரசியல் யாப்பு, மனித உரிமைகள், சிவில் சேவைகள் போன்றனவும் காணப்படுதல் வேண்டும். இன்றைய நாடுகள் அரசியல் யாப்பை முகிகியமனதொன்றாக கருதகின்றன. அதனூடக மனித உரிமைகளை பாதுகாத்தல் முக்கிமானதொன்றாகும். மேலும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாப்பதற்கு அரசிற்கு உதவியாக சிவில் சேவைகள் காணப்படுகின்றன. எனவே இவைகளும் நல்லாட்சியின் பண்புகளாக கருதப்படுகின்றன.

நல்லாட்சியின் தற்கால நோக்கு

நல்லாட்சி எனற எண்ணக்கருவானது அரம்பக் காலம் தொட்டு நிலவி வந்தது என்றாலும். 1980களின் பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. குறிப்பா மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டுவந்த அரசியல் ஸ்தீரமின்மை, போர்ச்சூழல் பொன்ற வற்றின் காரணமாக ஐ.நா சபை தனது அபிவிருத்தி திட்டத்தில் நல்லாட்சி பற்றிய எண்ணக்கருவை வெளியிட்டது. இதன் பின்னர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நஷனல் போன்ற நிறவனங்களும், அபிவிருத்தியை நோக்காக கொண்ட நிறுவனங்களும் நல்லாட்சி எண்ணக்கருவை முன்னெடுத்தன. 

ஜனநாயகமும் நல்லாட்சியம் 

ஜனநாயகத்தின் இன்னுமொரு பரிணாமமாகவே நல்லாட்சியை கருதல் வேண்டும். ஜனநாயக பண்புகள் நிலவும் ஒருநாட்டில் அல்லது சமூகத்திலேயே நல்லாட்சி நிலவ முடியும். ஜனநாயகம் சிறப்புற்று வளங்குமாயின் அங்கு இயற்கையாகவே நல்லாட்சி நிலவும். இருப்பினும் இன்றைய ஜனநாயகமானது பிரதிநிதித்துவ ஜனநாயகமாக(சுநிசநளநவெயவiஎந னுநஅழஉசயஉல) காணப்படுவதால் ஆடசிபீடம் ஏறும் ஆட்சியாளர்கள் பொது நலனை கருத்தில் கொண்டு செயற்படுதல் வேண்டும். இவ்வாறு இல்லாதவிடத்து அங்கு நல்லாட்சி நிலவ முடியாது. ஜனநாயக பண்புகள் பேணப்படும் போதுதான் நல்லாட்சித் தத்துவம் மேன்மையடைகின்றது. இன்று பல அரசுகளில் ஜனநாயகம் என்பது கோட்பாட்டு ரீதியாகவே காணப்படுகின்றது. இது சிறப்பான நல்லாட்சிக்கு வழிவகக்காது. இதன்படி எல்லா நாடகளும் அல்லது அரசுகளும் ஜனநாயக அரசுகள் என்று அழைக்கப்பட்டாலும், அங்கு நல்லாட்சி நிலவுகின்றதா என்பது சந்தேகமே. 

நல்லாட்சியை பாதிக்கும் காரணிகள்

1. ஒரு இடத்தில் அதிகாரமானது குவிந்தக் காணப்படுமாயின் அங்கு நல்லாட்சி நிலவுவது முடியாது. இதன்பொது அதிகாரம் உரைந்திருக்கும் நபரோ,குழுவோ சர்வாதிகாரப் போக்கைப் பின்பற்றலாம். இதன் போது மக்கள் நலன் பேணப்பட மாட்டாது.
2. ஆடசியில் காணப்படும் அரசாங்கமோ ஆட்சியாளரோ செயற்றிறன் குன்றியவர்களாக காணப்படுமிடத்து அங்கு ஆட்சியானது சிறப்புராது இதனால் மக்கள் நலன் ஓம்பப்பட மாட்டாது.
3. அரசின் கொள்கை தீர்மானங்கள் எடுப்பதிலிருந்து மக்கள் புறந்தல்லப் பட்டால் அங்கு மக்களுக்கான கொள்கைகள் முறையாக வகுக்கப்படாமல் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு விடுவர்.
4. ஓர் அரசில் லஞ்ச ஊழல் அதிகரித்தால் அங்கு வாழும் மக்களில் அதிகாரம், பலம் கொண்டவர்கள் மட்டுமே நன்மையடைய முடியும். பலவீனமானவர்கள் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் விடுவார்கள். இவ்வாரன நிலை நல்லாட்சியை சீர்குலைக்கக்கூடியது.
5. பிரதிநிதிதுவ ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்டு சட்டமன்றுக்கு அனுப்பப்படும் பிரதிநிதிகள் மக்களுக்கு பொறுப்பு சொல்லாது விடம்போது, ஆட்சி நிலையில் மக்களுக்கு விருப்பம் இல்லாது போய்விடும்.
இவ்வாரான காரணிகளுடன் ஜனநாயகத்தன்மை குன்றிய காரணிகளும் நல்லாட்சியை பாதிப்பதாக அமையும்.
   

இன்றைய உலகில் நல்லாட்சி 

மேற்குத்தேச ஜனநாயக நாடுகளை பொறுத்தவரை அவற்றில் ஓரளவிற்கு நல்லாட்சி தத்துவம் பின்பற்றப்படுகின்றது என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது. இதற்கான முக்கிய காரணம் மக்களின் அறிவுத் தன்மையே. சிறந்த அரசியல் அறிவுடைய மக்கள் தமது கொள்கை கொட்பாடுகளை முறையாக பின்பற்றகின்றமையே எனலாம். இதனோடு ஆட்சியாளர்களும் தமது கடமையை முறையாக மேற்கொள்கின்றனர். மேலும் சிறப்பான ஜனநாயக நுட்ப முறைகளும், வளர்ச்சியடைந்த பொருளாதாரப் போக்கும் இதற்கு காரணம் எனலாம்.
மூன்றாம் உலக நாடுகளை பொருத்தமட்டில் நல்லாட்சி என்பது அடையப்பட வேண்டிய ஒர் எண்ணக்கருவாகவே காணப்படுகின்றது. இந்நாடுகள் பொதுவாக பல அரசியல் பொருளாதார சிக்கல்களையும் அரசியல் ரீதியாக அறிவுக்குன்றிய மக்களையும் கொண்டு காணப்படுகின்றமையே காரணம். மேலும் இங்கு அனேகமான நாடுகள் காலணித்துவத்திற்கு உட்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதனால் ஒழுங்கான பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை பேண முடியாதுள்ளமை ஒரு காரணம் எனலாம். இதனோடு சனத்தொகை அதிகரிப்பு, தனிநபர் வருமானம் குறைவு, முறையான வளப்பங்கீடு இன்மை, மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு, போதிய வளங்களை கொண்டிருக்காமை பொன்றனவும் பிரதான காரணங்களாக அமைகின்றன.
இவற்றோடு மூன்றாம்மண்டல நாடுகள் அடிக்கடி யுத்தங்களுக்கு மகம் கொடுத்து வருவதனால் மக்கள் நலன் பேணம் திட்டங்கள் குறைவாக காணப்படுகின்றன. இதனோடு அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், இவர்களுக்கான நிவாரணங்ககள் போன்றவற்றிலேயே காலம் செல்கின்றது. தவிர நல்லாட்சியை நிறுவ முடியாதுள்ளது. செல்வந்த நாடுகள் இந்நாடுகளுக்கு கடன் உதவிகளை வழங்குதல், உணவப்பொருட்களை வழங்குதல், வரிசலுகைகளை வழங்குதல் போன்றவற்றினூடாக இந்நாடுகளை நவகாலணித்துவத்திற்கு இட்டுச்செல்கின்றன. இதனால் வளங்கள் சுரண்டப்பட்டு இந்நாடுகள் நலிவுற்றுப் போகின்றன.
இவ்வாறாக பார்க்கும் போது இலங்கையும் ஒரு வளர்ந்து வரும் நாடாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இங்கு நல்லாட்சியை நிலைநாட்டுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றது. குறிப்பாக கடந்தக் காலங்களில் ஏற்பட்டிருந்த போர்ச் சூழல் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டதோடு, ஆட்சி நிலையிலும் சிப்பினை காணக்கூடியதாக இருக்கவில்லை. எனினும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமானது நல்லாட்சியை நிறுவுவோம் என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டுள்ளது. எனினும் இது இலகுவானதொன்றா என்பது ஐய்யத்திற்கு இடமானதே.இலங்கையை பொருத்தவரை நல்லாட்சியை பாதிக்கும் பல காரணிகள் இங்கு காணப்படுகின்றன. இவற்றை களைவதாயின் ஒரு நீண்டகால அரசியல் கொள்கை பின்பற்றப்படுவதுடன், பொருளாதாரம், வளப்பங்கீடு என்பவற்றிலும் கவனம் செலுத்தப்படல் வேண்டும். இலங்கை ஒரு பல்லின சமூகத்தை கொண்ட நாடு என்ற வகையில் சரியானதும், தீர்க்கமானதுமான தீர்வு முன்வைக்கப்பட்டு, சிறுபான்மை இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் ஆட்சியானது வலைந்துக் கொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் நல்லாட்சி தத்துவம் நிலைபெறும்.
இவ்வாறாக பார்க்கும் போது பொதுவளங்களை பொருப்புடனும் செயற்றிறனுடனும் பயன்படுத்தி ஊழலை தவிர்த்து, மனித உரிமைகளை பேணி, சட்ட ஆட்சி செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் ஒன்றாக நல்லாட்சி தத்துவம் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் அடைவதற்கு மிகவும் கடினமானதொரு சிந்தனையாகவே நல்லாட்சி காணப்படுகின்றது. எனினும் சில நாடுகள், சமூகங்கள் நல்லாட்சி தத்துவத்தை நெருங்கி வருகின்றன. எப்வபடியாயினும் மனித அபிவிருத்தி நிலைத்து நிற்பதற்கு செயற்பாட்டு ரீதியானதும், உண்மையானதுமான ஒரு சிந்தனையாக நல்லாட்சி காணப்படுகின்றது.