Thursday, September 22, 2016

மத்திய கால மெய்யியல்

மத்திய கால மெய்யியல் என்பது சுமார் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசுவீழ்ச்சியில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி வரையான நடுக் கால மெய்யியல் ஆகும். மத்திய கால மெய்யியல் 8 ஆம் நூற்றாண்டு மத்தியில் பகுதாதுவிலும் 8 ஆம் நூற்றாண்டு கடைசிப் பகுதியில் சார்லமேன் நாடோடி அவையிலும் பிரான்சில் ஆரம்பமாகியது.[1] மரபார்ந்த காலகிரேக்கத்திலும் உரோமிலும் ஏற்பட்ட பண்டைய கலாச்சார வளர்ச்சியை மீளவும் கண்டுபிடிக்கும் செயற்பாடாக பகுதியளவில் அமைந்தும், இறையியல் பிரச்சனைகளின் தேவையையை பகுதியாக வெளிக்கொணருவதாகவும், புனிதக் கோட்பாட்டுடன் சமயச் சார்பற்ற கற்றலை இணைப்பதாகவும் அமைந்தது.


கிறித்தவ மெய்யியல்


இயேசு நூல்களை எழுதினார் என்பதற்குச் சான்றுகள் இல்லை. அவரால் மெய்யியல் பற்றியோ அல்லது இறையியல் பற்றியோ எழுதினார் என்பதற்கும் சான்றுகள் இல்லை.
ஆனால், கிறித்துவின் இறப்புடன் கிறித்தவ மெய்யியல் திருத்தூதர்களால் வளரத் தொடங்கியது. யூத உரோம குடிமகனான திருத்தூதர் பவுல் திருமுகங்களையும் மடல்களையும் ஆரம்ப கிறித்தவ திருச்சபைக்கு எழுதினார். இது போதனையாகவும் இறையியலாகவும் இருந்தது. சில இடங்களில், அவர் காலத்து பிரபல்யம் பெற்ற (குறைகூறல், ஐயவாதம், உறுதிப்பாட்டுவாதம்) மெய்யியலாளர்கள் போன்று செயற்பட்டார். திருத்தூதர் பணிகள் என்ற விவிலிய நூலில் பவுல் கிரேக்க மெய்யியலாளர்களுடன் நடத்திய உரையாடல் மற்றும் விவாதம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திருமுகங்களிலும் பிரதிபலிக்கிறது. எ.கா: "போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவருடைய திருமுகங்கள் பிற்கால கிறித்தவ மெய்யியலுக்கு குறிப்பிடத்தக்க மூலமாக மாறியது.

யூத மெய்யியல்


யூத மெய்யியல் அல்லது யூதத் தத்துவம் (Jewish philosophyஎபிரேயம்פילוסופיה יהודית‎) என்பது யூத சமயத்துடன் தொடர்புபட்ட அல்லதுயூதர்களால் நிறைவேற்றப்படும் சகல மெய்யியல்களையும் குறிக்கும்.[1] தற்கால யூத அறிவொளி மற்றும் யூத விடுதலை வரை, யூத மெய்யியலானது ராபி (போதக) யூதப் பாரம்பரியத்தினுள் ஒத்திசைவான புதிய கருத்துக்கள் சரிசெய்யும் முயற்சிகளுக்குத் தடையாகவிருந்தது. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட உடனடிக் கருத்துக்கள் தனித்துவமாக யூத அறிஞர் கட்டமைப்பு மற்றும் உலக பார்வைக்கு அவசியமில்லை என்றாகியது. தற்கால சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளலுடன், யூதர் உலகியல்சார் கல்விகளை உள்வாங்கி அல்லது உலகின் அவசியத்தை சந்திக்கத்தக்க முற்றிலும் புதிய மெய்யியல்களை அவர்களாகவே தற்போது கண்டுகொண்டு வளரச் செய்துள்ளனர்.

பண்டைய கிரேக்க மெய்யியல்

பண்டைய கிரேக்க மெய்யியல் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்று கெலனியக் காலம் வரையிலான உரோமைப் பேரரசு காலப் பண்டைக் கிரேக்கம் வரை தொடர்ந்து, 1453 வரை காணப்பட்டது. இது பல பரந்த, வகையான விடயங்களான அரசியல் தத்துவம்நன்னெறி,மீவியற்பியல்உள்ளியம் (மெய்யியல்)ஏரணம்உயிரியல்சொல்லாட்சிக் கலைஅழகியல்போன்றனவற்றுடன் தொடர்புபட்டிருந்தது.
பல மெய்யியலாளர்கள் இன்று, கிரேக்க மெய்யியல் பல மேற்கத்திய நாகரிகத்தில் தாக்கம் செலுத்தியது என ஏற்றுக் கொள்கிறார்கள். ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் குறிப்பிடும்போது: "ஐரோப்பிய மெய்யியல் மரபின் பாதுகாப்பான பொதுப் பண்பு என்பது அது பிளேட்டோவின்அடிக்குறிப்புகளின் ஒரு தொடரைக் கொண்டுள்ளது என்பதாகும்."[1] தெளிவாக, செல்வாக்கின் உடைவுபடாமை பண்டைக் கிரேக்கம், கெலனிய மெய்யியலாளர்கள் முதல் ஆரம்ப இசுலாமிய மெய்யியல், ஐரோப்பிய மறுமலர்ச்சிஅறிவொளிக் காலம் வரை தொடர்ந்தது

மேற்குலக மெய்யியல்

மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்தியசீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட,அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.

தோற்றம்
பழங்காலத்துப் புரிதல் அடிப்படையிலும், அக்காலத்து மெய்யியலாளர்கள் எழுதியவற்றின் அடிப்படையிலும், மெய்யியல், எல்லா அறிவுசார் துறைகளையும் உள்ளடக்கி இருந்தது எனலாம். இன்று நாம் மெய்யியல் என்று புரிந்து கொள்ளும் விடயங்களோடு, கணிதத் துறையும், இயற்பியல்,வானியல்உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளும் மெய்யியலுள் உள்ளடங்கி இருந்தன. மேற்குலகத்தின் மெய்யியல், பல்வேறுபட்ட தனித்துவமான மரபுகள், அரசியல் குழுக்கள், சமயக் குழுக்கள் போன்றவற்றின் சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதால், பல வேளைகளில் மேற்குலக மெய்யியல் என்னும் தொடர் தெளிவற்ற பொருளையே தருகிறது என்பதுடன் அதனைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருப்பதில்லை.

மேற்குலக மெய்யியலின் துணைத் துறைகள்
மேற்குலக மெய்யியலாளர்கள், பல பிரிவுகளாக அல்லது சிந்தனைக் குழுக்களாகப் பிரிந்து இருப்பதைக் காணலாம். மெய்யியல் துறையின் வெவ்வேறு பகுதிகள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதனாலும், கருத்தியல் அடிப்படையிலான வேறுபாடுகளினாலும் இப்பிரிவுகள் உருவாகின்றன. பழங்காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது, ஏரணம்அறவியல், இயற்பியல் என்பவற்றைக் கையாளும் உறுதிப்பாட்டியல் (அல்லது "நடுநிலைக் கோட்பாடு") எனப்படும் மெய்யியல் பிரிவு. இது உலகின் இயல்பை அறிந்துகொள்வதற்கான ஒரு துறையாகக் கருதப்பட்டதுடன், மீவியற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியும் இருந்தது. தற்கால மெய்யியல், பொதுவாக, மீவியற்பியல் (அல்லது "நுண்பொருளியல்"), அறிவாய்வியல், அறவியல், அழகியல் என்னும் பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது[1]. ஏரணம் சில வேளைகளில், மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவாகவும், சில வேளைகளில் ஒரு தனியான அறிவியலாகவும், வேறு சில சமயங்களில் மெய்யியலின் பல்வேறு கிளைகளிலும் பயன்படும் ஒரு மெய்யியல் முறையாகவும் விளங்குகிறது.
தற்காலத்தில், இவ்வாறான முக்கிய பிரிவுகளுள் எண்ணற்ற துணைப் பிரிவுகளும் உள்ளன. பரந்த அளவில் பகுத்தாய்வு மெய்யியல்,கண்டம்சார் மெய்யியல் போன்ற பிரிவுகளும் அவற்றுக்குள் துணைப்பிரிவுகளும் உள்ளன.
குறிப்பிட்ட துணைப்பிரிவுகளின் மீதான ஆர்வம் பல்வேறு கால கட்டங்களில் குறைந்தும் கூடியும் வந்துள்ளது. சில வேளைகளில் சில துணைப்பிரிவுகள் மெய்யியலாளரிடையே பெருமளவு ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைவதுடன், மெய்யியலின் முக்கியமான பிரிவுகளைப் போலவே இவை தொடர்பிலும் பெருமளவு நூல்கள் வெளியாவதையும் காணலாம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மீவியற்பியலின் ஒரு துணைப்பிரிவான மனம்சார் மெய்யியல், பகுத்தாய்வு மெய்யியலுள் பெருமளவு கவனத்தை ஈர்த்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

கணிதத்தின் மெய்யியல்

கணிதத்தின் மெய்யியல் என்பது மெய்யியற் கருதுகோல்கள், அடிப்படைகள், கணிதத்தின் உள்ளடக்கங்கள் பற்றிய மெய்யியலின் பகுதி கற்கையாகும். கணிதத்தின் மெய்யியல் நோக்கம் மக்களின் வாழ்வில் கணிதத்தின் இடத்தை விளங்கிக் கொள்ளவும், கணிதத்தின் முறையியல் மற்றும் இயற்கையின் பொறுப்பை வழங்குவதுமாகும். கணிதத்தின் கட்டமைப்பு இயற்கையும், தருக்கமும் பற்றிய கற்கை பரந்ததும், அதனுடைய மெய்யியற் சரிநேர்ப் படிவத்தினிடையே தனித்துவமானதாகவும் உருவாக்குகின்றது.
திரும்பத் திரும்ப நிகழும் தலைப்புக்கள் பின்வருவனவற்றை கொண்டுள்ளன:
  • கணித தலைப்பு விடயத்தின் மூலங்கள் என்ன?
  • கணித உட்பொருளின் மெய்ப்பொருள் மூல ஆராட்சி நிலை என்ன?
  • கணிதப் பொருளை தொடர்புபடுத்தல் என்பது என்ன அர்த்தம் கொள்கிறது?
  • கணித கருத்தின் சிறப்பு என்ன?
  • கணிதத்திற்கும் தருக்கத்திற்குமிடையிலான தொடர்பு என்ன?
  • கணிதத்தில் எழுத்து மொழிபெயர்ப்பின் பங்கு என்ன?
  • கணிதத்தில் ஒர் பாத்திர விசாரணை நிறைவேற்றல் வகை என்ன?
  • கணித விசாரணை குறிக்கோள்கள் எவை?
  • கணிதம் அதன் அனுபவத்தை பற்றிக் கொண்டிருக்கச் செய்வது என்ன?
  • கணிதத்தின் பின்னான மனித உளவியல்தனித்தன்மைகள் எவை?
  • கணிதத்தின் அழகு என்பது என்ன?
  • கணித உண்மையின் இயற்கையும் அதன் மூலமும் என்ன?
  • கணிதத்தின் சார உலகிற்கும் பருப்பொருள் பிரபஞ்சத்திற்கும் இடையிலான உறவு என்ன?
கணிதத்தின் மெய்யியல் மற்றும் கணித மெய்யியல் எனும் பதங்கள் ஒரே பொருட் கொண்டதாக அடிக்கடி பாவிக்கப்படுகின்றன

மொழி மெய்யியல்

மொழி மெய்யியல் (Philosophy of language) என்பது மொழி பற்றிய மெய்யியலின் நான்கு மத்திய பிரச்சனைகள் ஆகும்.[1] அவையாவன: அர்த்தத்தின் இயற்கைப் பண்பு, மொழிப் பாவனை, மொழி அறிதிறன் மற்றும் மொழிக்கும் உண்மைநிலைக்குமான தொடர்பு.[1]மொழி மெய்யியல் வேறுபட்ட விடயமாக அல்ல, ஏரணத்தின் பகுதியாக அணுகப்பட வேண்டும் என மெய்யியலாளர்கள் கருதினார்கள்.
முதலும் முதன்மையுமாக மொழி மெய்யியலாளர்கள் அவர்கள் விசாரனையை இயற்கை அர்த்தம் மீது முன்னுரிமைப்படுத்துகிறார்கள். அவர்கள் சில "அர்த்தத்திற்கு" என்ன அர்த்தம் என விளக்க முயல்கிறார்கள். வீணான விடயங்கள் கருத்தொற்றுமையின் இயற்கை, தன்னிடத்தேயான அர்த்தத்தின் மூலம், எப்படி ஏதாவது அர்த்தம் எப்போதும் உண்மையாக இருக்க அறியமுடியும் ஆகியவை உள்ளடக்குகின்றது.

மன மெய்யியல்

மன மெய்யியல் (Philosophy of mind) என்பது மனதின் இயல்பு, மனரீதியான நிகழ்வுகள், மனச் செயற்பாடுகள், மனப் பொருள், நனவுநிலை மற்றும் பெளதீக உடலுக்கும், குறிப்பான மூளைக்கும்இவற்றுக்குமிடையேயான உறவு பற்றிக் கற்கும் மெய்யியலின் ஓர் பகுதியாகும். மன மெய்யியலில் மன-உடல் சிக்கல் (எ.கா: உடலுடன் மனதுக்குள்ள தொடர்பு) முக்கிய விடயமாகவும், பெளதீக உடலுடன் மனதின் இயல்பு உறவு அற்றது என்ற விடயமும் அதாவது, குறிப்பிட்ட மன நிலையின் இயல்பும் நனவுநிலையும் எப்படி சாத்தியம் போன்ற விடயங்களைக் கொண்டும் உள்ளது

மெய்யியல்

மெய்யியல் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே மெய்யியல்.

மெய்யறிவு
இயற்கை விஞ்ஞானம் மிக வேகமாய் முன்னேறிச் செல்கிறது. எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது தத்துவவியல் (Philosophy) அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது.[1]
மெய் என்ற உடலில் உணர்வு என்ற உண்மையைப் புத்தியால் தேட அறிவு என்ற ஆற்றல் வெளிப்படும் பொழுது தத்துவம் என்ற உண்மை உணர்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் விளக்கதை உணர்வு பூர்வமாக அறியவைப்பது மெய்யறிவு. - (சுபஸ்ரீ ஸ்வாமிகள்)
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." திருவள்ளுவர்(கிமு 200)
"ஆராயப்படாத வாழ்வு வாழ்வதற்குப் பெறுமதியற்றது." கிரேக்க மெய்யியலாளர்சாக்ரட்டீசு (கி.மு 470-399)
மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா, என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை, உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம், விவாதம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.

தற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்தியர்களும், சீனர்களும், செருமானியர்களும், கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக, அடிப்படையாகச் சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். மெய்யியல் என்பது ஆங்கிலத்தில் Philosophy (ஃபிலாசஃபி) என்று கூறப்படுவது. இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய Φιλοσοφία (philo-sophia) என்பதில் இருந்து பெற்றது. இசொல்லின் பொருள் அறிவின் பால் காதல் (அறிவால் ஈர்க்கபடும் துறை) என்பதாகும்.

மெய்யியல் என்ற துறை சார்ந்த ஆய்வு செருமானியர் தொடக்கம் மேற்குலகிலேயே தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவை காலனித்துவ ஆட்சி செய்த போது அவர்கள் சீன இந்திய சிந்தனைகளில் பலவற்றை மெய்யியல் சிந்தனைகளாக அடையாளப்படுத்தினார்கள். இவ்வாறே பின்னர் ஆப்பிரிக்க, அமெரிக்க முதற்குடிமக்கள் சிந்தனைகளில் இருந்தும் மெய்யியல் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் காலனித்துவத்துக்கு உட்பட்டவர்களும் தமது சிந்தனைகளை இவ்வாறு அடையாளப்படுத்தியும், இத் துறை சார்ந்தும் செயற்படத் தொடங்கினர்.

வரலாறு
காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள்எகிப்தியர்கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்றுநடுகிழக்கு நாடுகளில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.

பண்டைய சீனர்கள்

சீன மெய்யியல்
 சீன நாகரிகத்தில் தோன்றிய எடுத்தாளப்பட்ட மெய்யியல் சிந்தனைகளைக் குறிக்கின்றது. 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சீன மொழியில் எழுதப்பட்ட சிந்தனைகளைச் சீன மெய்யியல் கொண்டிருக்கின்றது. சீன மெய்யியல் இந்திய, இசுலாமிய, மேற்குலக, ஆபிரிக்க மெய்யியல்களில் இருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகிறது. சீன மெய்யியல் இயற்கையை சார்ந்தது, காரியத்தையும் நிர்வாகத்தையும் முக்கியப்படுத்துவது. இந்திய மெய்யியல் போலன்றி அது சமயத்தை அல்லது கடவுள்களை முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதை விடுத்து ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தை இவ்வுலகில் உருவாக்குவத்தே சீன மெய்யியலின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. திறமான நிர்வாகம் மூலம் ஒழுக்கத்தையும் (order) ஒத்துழைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தையும் உருவாக்க சீன மெய்யியல் விளைகிறது. அரசின் நிர்வாகத்தில் போரும் ஒரு நிகழ்வாக இருந்ததால், போரியலும் சீன மெய்யிலின் ஒரு முக்கிய அங்கம்.

வகைகள்
மெய்யியல் இருவகைப் படுகின்றது. அவையாவன, கிழக்கத்திய மெய்யியல் மற்றும் மேற்கத்திய மெய்யியல் என்பனவாகும். கருத்தளவிலும் விளக்கமுறையிலும் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கின்றது.

கிழக்கத்திய மெய்யியல்

கிழக்கத்திய மெய்யியல் (Eastern philosophy) என்பது ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.
கிழக்கத்திய மெய்யியலுக்குள் அரபி மெய்யியல் மற்றும் யூத மெய்யியலையும் சேர்த்துக் கருதுவது உண்டு. இக்கருத்து புவியியல் அடிப்படையை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக, கருத்தளவிலும் விளக்கமுறையிலும் மேற்கத்திய மரபுக்கும் கிழக்கத்திய மரபுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன என்னும் அடிப்படையிலும் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கிறது.

மேற்கத்திய மெய்யியல்

மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலைஇந்தியசீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட,அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.