Wednesday, October 19, 2016

இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம்

மின்னணுக் குப்பை

மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன.

இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன.

இவ்வாறு எறியப்படும் கருவிகள்:

துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள்
மின்னலை அடுப்பு போன்றவை.
மின்னணு இசைக்கருவிகள்,தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குக்கருவிகள்
கணினி மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள்


உலகை அச்சுறுதலுக்கு உள்ளாக்கும் இலத்திரனியல் கழிவுகள்

தகவல் தொழில்நுட்ப புரட்ச்சியினைத் தொடர்ந்து உலகு எங்கும் இலத்திரனியல் சாதனங்கள் பல்கிப் பெருகின.இவற்றின் மேம்பட்ட பதிப்புகள் குறுகிய காலத்திற்குள் சந்தைகைளை ஆக்கிரமிப்பதால் காலவதியான பொருட்கள் குப்பை மேடுகளில் நிரம்பி வழிவதால் பூமிபந்தின் தூய்மை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.இவற்றினை ஒழுங்கு படுத்தவது அரசுகளிற்கும் சுற்றுசூழல் ஆர்வலா்களிற்கும் பெரும் தலையிடியாக உள்ளது.

வரவிலக்கணம்-இலத்திரனியல் கழிவுகள்

மனிதர்களால் பாவனைக்கு உட்படுத்தி கைவிடப்பட்ட இலத்திரனியல் பொருட்களை இ.கழிவு என வரவிலக்கணப்படுத்தலாம்.சுருங்கக்கூறின் கைவிட்ப்பட்ட இலத்திரனியல் சாதனங்களே இ.கழிவுகள் ஆகும்.இங்கு இலத்திரியல் சாதனங்கள் என்பது தொலைபேசிகள்இகணனிகள்இதொலைக்காட்சிப் பெட்டிகள்இகுளிர்சாதனம் பெட்டிகள் போன்றவற்றைக் குறிக்கிறது..

இலத்திரனியல் கழிவு வெளியேற்றத்தில் உலக நாடுகளின் வகிபாகம்

2006 ஆண்டில் இருந்து ஜ.நாவின் சுற்று சூழல் நிகழ்ச்சித்திட்டம் இ.கழிவுகள் தொடர்பான மதிப்பீட்டினை ஆரம்பித்தது.இவ் மதிப்பீட்டின் பிரகாரம் ஆண்டுதோறும் 20-50 மில்லியன் கழிவுகள் உருவாக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகளாவான கழிவுகளை ஜரோப்பாஇஅமெரிக்காஇஅவுஸ்ரேலியா போன்ற நாடுகள் வெளியிடுகின்றன. எனினும் அண்மைகாலங்களில் துரிதமாக வளா்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட சீனாஇஇலத்தீன் அமெரிக்க நாடுகள்இகிழக்கு ஜரோப்பிய நாடுகள் அதிகளவான இ.கழிவுகளை வெளியிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியா இ.கழிவு வெளியேற்றத்தில் 5 ம் இடத்தில் உள்ளது ஆசியநாடுகளில் சீனா இயப்பான் நாடுகள் அதிகளாவன கழிவுகளை வெளியிடுகின்றன.ஆபிரிக்க நாடுகள் மிகவும் குறைந்தளவான கழிவுகளையே உற்பத்தி செய்கின்றன.

பல அபிவிருத்தியடைந்த நாடுகள் அன்பளிப்பு என்ற போர்வையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கு தமது இலத்திரனியல் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றன.இதனால் குறைவிருத்தி நாடுகள் இ.கழிவு தொடர்பான முகாமைத்துவத்தில் மேலதிகமான சுமைகளையும் தாங்க வேண்டியுள்ளது.

இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள்

ஏனைய கழிவுகள் போலல்லாது இ.கழிவுகள் மிகவும் ஆபத்தானவை.பெரும்பாலான இ.குப்பைகளில் ஈயம்இபாதரசம்இநிக்கல்இகேட்பியம் போன்ற வேதிப் பொருட்டகள் காணப்படுகின்றன .இவற்றைவிட மிக கொடிய விளைவினைத் தரும் பொலிபுறோமைற்றட் பினைல் எதர் (Pடீனுநுள) என்ற வேதிப்பொருள் எரிபற்று நிலையினை குறைப்பதற்காக இலத்திரனியல் சாதனங்களில் 30 வீதம் வரை பயன்படுத்தப்படுகின்று.இதனால் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் ஏனைய வேதிப்பொருட்களால் ஏற்படும் தாக்கத்தினைவிட பல்மடங்கு அதிகமானது.
பொதுவாக கீழ்வரும் பாதிப்புக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகிறது
1.நீர் நிலைகள் மாசுபடல்
2.விவசாய நிலங்கள் மாசுபடல்
3.இ.கழிவுகளை எரியூட்டுவதால் வளி மாசடைதல்
4.புற்றுநோய் ஏற்படல்
5.தையரொக்சன் பிரச்சனைகள்
6.கருவளவீதம் குறைவடைதல்
7.வயதுக்கு முன்பு பூப்படைதல்

இலத்திரனியல் கழிவு முகாமை
மீள் பயன்பட்டிற்கு இ.கழிவுகளை உட்படுத்துவது சிறந்த கழிவு முகாமைத்துவம் ஆகும்.பெரும்பாலான கழிவுகளில் பெறுமதி மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன.எனினும் விருத்தியடைந்த நாடுகள் இது செலவு கூடிய நடவடிக்கை எனக் கருதி அபிவிருத்தியடைந்த நாடுகளிற்கு இக் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றன. குறிப்பாக சீனா உலக இ.கழிவுகளில் 80 வீதத்தினை கொள்வனவு செய்கிறது இதனைவிட இந்தியா, பாகிஸ்தான், வியட்னாம், பிலிப்பையின்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகளை இவ் நாடுகளே மீள் சுழற்ச்சி செய்கின்றன.

மீள் சுழற்ச்சிக்கு நவீன நுட்டபங்களை பயன்படுத்தல் சிறந்ததாகும்.அனேகமான இ.கழிவுகள் ஆபத்தானவை ஆபத்தில்லாதவை என்னற பாகுபாடுஇன்றி மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றன.உண்மையில் இக் குப்பைகள் உயர் தரத்தில் பரீட்ச்சிக்கப்பட்டு கேடு விளைவிக்காத பொருட்கள் மட்டும் மண்ணில் புதைக்கப்படவேண்டும். மக்களிற்கு இ.கழிவுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டுதல் அவசியமாகும்.இதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் அனர்த்தத்தினை கணிசமான அளவு குறைத்துக் கொள்ளலாம்.

உலகில் மின்னணுக் கழிவுகள்...

பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள், உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் (டீயளநட யுபசநநஅநவெ) உள்ளது இந்த ஒப்பந்தத்தின்

பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயற்றிட்டத்தின் (டீயளநட யுஉவழைn நேவறழசம) அறிக்கையின்படி ஐக்கிய அமெரிக்காவில் உருவாகும் கழிவுகளில் 50 - 80 வீதம் வரை வளர்முக நாடுகளுக்கு மறுசுழற்சி செய்வதற்காக அனுப்பிவைக்கப் படுகின்றது. அதிகமாக மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் வளர்முக நாடுகளின் வரிசையில் சீனா இந்தியா ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன.
மேலைத்தேய நாடுகளால் வெளியிடப்படும் மொத்த மின்னணுக் கழிவுகளில் ஏறத்தாள 90 வீதம் ஆனவை சீனாவையே வந்தடைகின்றன. இதில் 20 - 30 வீதம் ஆனவை மீள் சுழற்சி செய்யப்பட ஏனையவை குப்பைத் தொட்டிக்கே செல்கின்றன. இதேபோன்று சென்ற ஆண்டுகளில் இந்தியாவிற்கும் சுமார் ஒன்பது இலட்சம் தொன் அளவான இலத்திரனியல் கழிவுப் பொருட்களை ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் வழங்கியுள்ளன.
பொருளடக்கம்ஜமறைஸ
1 இன்றைய கைத்தொழில்
2 நவீன தொழில்நுட்ப விருத்தி
3 பொருட்களின் பாவனை
4 மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாழ்வது


இன்றைய கைத்தொழில்

இன்றைய கைத்தொழில் மயமான யுகத்தில் புவியானது பல்வேறுபட்ட சூழல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. ஆந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் புவிச்சூழலி;ன் இயல்பு நிலைக்கு பெரிதும் அச்சுறுத்தலாக அமையும். மாசாக்கிகளின் வரிசையில் புதிய வரவாக இம் மின்னணுக் கழிவுகள் அமைகின்றன. மின்னணுக் கழிவுகள் என்பது பல்வேறுபட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் கருவிகள் என்பன உடமையாளர்களுக்கு பயன்படாதுபோகும் பட்சத்தில் அவை மின்னணுக் கழிவுகளாக மாறுகின்றன. இன்று பெரிதும் பாவனையில் இருக்கின்ற மின்னணுப் பொருட்களுக்கான உதாரணங்களின் பட்டியல் தொலைக்காட்சிப்பெட்டி, கணணி மற்றும் அதுசார் பொருட்கள், குளிர்சாதனப்பெட்டி, குளிஷரூட்டி, கையடக்கத் தொலைபேசி என நீண்டுகொண்டே செல்லும். இவற்றுள் சந்தையில் நிலவும் போட்டித்தன்மை காரணமாக நாளுக்கொரு புதியவகை என உருவாகிக் கொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசிகள் கணணிகள் என்பன புவியை மாசாக்குவதில் அதிக பங்களிப்பினை வழங்கி வருகின்றமை அறியப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப விருத்தி

நவீன தொழில்நுட்ப விருத்தியின் விளைவாக மனிதனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், வேலைகளை இலகுவாக்கிக் கொள்வதற்கும், சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் மின்னணுப் பொருட்களும் கருவிகளும் அதிகளவில் புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப் படுவதுடன், இன்றைய சனத்தொகைப் பெருக்கத்தின் விளைவாக இப்பொருட்களுக்கான கேள்வியும் அதிகரித்து வருவதனால் மின்னணுப் பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பாவனைக்கும் வந்துசேர்கின்றன. இவ்வாறு பயன்பாட்டிற்குள் ஊடுருவும் மின்னணுப் பொருட்கள் சிறிது காலத்திலேயே மின்னணுக் கழிவுகளாக வெளியேறுகின்றன. அதாவது இத்தகய கருவிகள் பொதுவாக பழையதாகி செயலிழந்து விடுவதன் காணைமாகவோ அல்லது அவற்றினை விடவும் வினைத்திறண் மிக்க கருவிகளை பயனாளர்கள் கொள்வனவு செய்வதனாலோ இவை கழிவுகளாக வெளியேற்றப் படுகின்றன. சாதாரணமாக நோக்கில் இன்று பாவனைக்கு உட்படுத்தப்படும் இம் மின் உபகரணங்களின் பாவனை ஆயுட்காலம் மிகவும் குறுகியதாக இருப்பதுடன், அவை பழுதடைந்துவிட்டால் திருத்தம் செய்து பாவனைக்கு உட்படுத்துவதை விட புதிதாக ஒன்றை கொள்வனவு செய்தல் இலகுவானதாகவும், திருப்தி மிக்கதாகவும் அமைகின்றது. அதுமட்டுமன்றி பொருளாதார ரீதியில் குறைவான வசதி கொண்ட மக்களும் பெற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் சந்தையில் இவற்றின் மலிவான கிடைப்பனவும் மின்னணுக் கழிவுகளின் துரித வெளியீட்டை தூண்டுகின்றன. சுருங்கக்கூறின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ப மின்னணுக் கழிவுகளின் வெளியீடும் தற்காலத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

பொருட்களின் பாவனை

பொருட்களின் பாவனையின்போது உள்ளீடு இருப்பின் வெளியீடு இருப்பது நியதி எனினும் இவ்வாறு வெளியிடப்படும் மின்னணுக் கழிவுகள் பல்வேறு வகையான இரசாயன, நச்சுப் பொருட்களை கொண்டிருப்பதாலேயே இவற்றினால் ஏற்படும் சூழல் தாக்கம் பற்றி நாம் சிந்திக்கவேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதாவது இவ் மின்னணுக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளியிடப்படும் வாயுக்கள் காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தல், வளிமண்;டல வாயுக்கூட்டுக்களில் விரும்பத்தகாத மாற்றங்கள் பலவற்றை ஏற்படுவததல்; எனபதோடு உயிரின சுவாசத்திற்கும் கேடானதாக மாறுகின்றது. மேற்படி கழிவுகளை புதைப்பதனால் மண்ணின்; இயல்புநிலை, மண்நீர் மண்வளம்; என்பன பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவற்றை நீர்நிலைகளில் விடுவதன்மூலம் நீரில் இரசாயன சேர்க்கைக்கு உள்ளாவதுடன், நீர்வாழ் அங்கிகளைப் பாதிப்பது மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீர்க்கோளச் சூழலையே பாதிப்பதாக அமையும். உலகரீதியில் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக ஐந்து கோடி தொன் எனும் அளவில் மின்னணுக் கழிவுகள் சேர வாய்ப்பிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றபோதிலும் இதில் 20மமூ ஆனவையே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. மீதி 80மூ ஆனவை ஏனைய கழிவுகளுடன் இணைந்து சூழலை மாசுபடுத்தும் பணியில் இறங்கி விடுகின்றன. வளர்முக நாடுகளில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் இப்போது இருக்கும் மின்னணுக்கழிவுகளைளளப் போன்று மூன்று மடங்கு கழிவுகளினால் பல்வேறு சிக்ல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இவ்வாறு எந்த வகையிலும் முகாமைத்துவம் செய்யக் கடினமான மின்னணுக் கழிவுகளும் அதன் தாக்;கமும் தொழில்நுட்ப விருத்தியடைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளை விட வளர்முக நாடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் முன்னணி வகிப்பினும் மின்னணுக்கழிவுகள் அதிகளவில் வந்துசேரும் இடங்களாக வளர்முக நாடுகளே காணப்படுகின்றன. வளர்முக நாடுகள் மட்டும் ஏன் இம் மின்னணுக் கழிவுத் தொட்டியாக்கப்பட வேண்டும்? என்ற கேள்வி எம்மிடம் எழ வாய்ப்புண்டு இதற்கு காரணம் வளர்முக நாடுகள் நன்கொடை, அன்பளிப்பு, மீள் சுழற்சி ஊக்குவிப்பு என்ற போர்வைகளில் பெரும்பாலான கழிவுகளை வளர்முக நாடுகளுக்கு நாடு கடத்துகின்றன. இதனை மீள் பயன்பாடு என்றநோக்குடன் பெற்றுக் கொள்ளும் வளர்முக நாடுகளில் இத்தகைய உபகரணங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு ஓரிரு ஆண்டுகள் அல்லது மாதங்கள் மாத்திரமேதான் பின்னர் அவை சர்வ சாதாரணமாக தூக்கி வீசப்படுகின்றன. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இவ்வண்ணமே இலத்திரனியல் கழிவுகள் உருவாகின்றன.

மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாழ்வது இக் கழிவுகள் தொடர்பான சிக்கல்கள் அனைத்து நாடுகளிலும் எதிர்காலத்தில் எதிர்நோக்கப்பட இருக்கின்ற போதிலும் குறிப்;பாக இலங்கையும் மீள் சுழற்சி, நன்கொடை என்ற பெயரில் அதிகளவான இலத்திரனியல் கழிவுகளை அபிவிருத்தியடைந்த நேச நாடுகளிடமிருந்து பெற்று வருகின்றதன்

பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்காரணமாக கொழும்பு நகரம் இன்று இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினைக்கு உள்ளகி இருக்கின்றது. ஏனெனில் இன்றைய அதிகரித்த கணணிப் பாவனை, இலத்திரனியல் சாதனங்களின் தொடர்ச்சியான கொள்வனவு என்பன எதிர்கால இலத்திரனியல் பிரச்சினைக்கு அத்திவாரமிடல் எனறே கூறவேண்டும். காரணம் கணணிக் கழிவுகளும், மற்றும் ஏனைய இலத்தினியல் கழிவுகளும் அனைத்து குப்பைத் தொட்டிகளையும் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலை அனைத்து நகரங்களிலும் உணரப்பட்டிருப்பினும்;; இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய அவசியம் உணரப்படவில்லை என்றே கூறவேண்டும்.
இவ் நச்சு வாயுக்களை வெளியிடக்கூடிய மின்னணு சாதனங்களின் கழிவுகளை எவ்வாறு கையாழ்வது என்பது குறித்த மாகாநாடு ஒன்று ஜூன் - 23 - 2008 அன்று இந்தோனேசியாவின் தலைநகரான பாலியில் நடைபெற்றது. இதில் 170 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனிதன் உள்ளிட்ட சகல உயிரினங்களுக்கும், தாவரங்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்கும் பெரும் ஆபத்தாக உருவாகி வரும் இந்த நச்சுக் கழிவுகளை எவ்வாறு அழிப்பது அல்லது குறைப்பது என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. சுற்றுச் சூழலை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக இந்த நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள் விவகாரம் உருவாகி வருவதாக இந்த மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதனை எங்ஙனம் கையாழ்வது என்பது குறித்தும் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இதேபோன்ற மின்னணுக் கழிவுகள் பற்றிய மாநாடுகளும் விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்பட்ட வண்ணம் இருப்பினும் இம் மின்னணுக் கருவிகளின் உருவாக்கமும் பாவனையும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைக்கப் படவில்லை காரணம் இன்றைய நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மின்னணுப் பொருட்கள் மாறியுன்னமையே ஆகும். எது எவ்வாறிருப்பினும் மின்னணுக் கருவிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாதுவிடினும் அதன் கழிவுகளைக் கையாழ்வதற்கு சிறந்த நெறிமுறை ஒன்று அவசியமாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இவற்றை மீள்சுழற்சி அல்லது மீள் பயன்பாடு செய்வதற்கு இவ் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற நாடுகளும், நிறுவனங்களும் முன்வரவேண்டும். இப்படிப்பட்ட கழிவுகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில் மறுசுழற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என க்ரீன் பீஸ் (புசநநn pநயஉநள) என்ற அமைப்பும் வேண்டிநிற்கின்றது. அத்துடன் விற்பனை செய்யும்போதே அதன் மறுசுழற்சிக்கான விலையையும் அந்தப் பொருளில் சேர்த்துவிடலாம் என்றும் அப்பொருளின் ஆயட்காலம் முடிந்ததும் அந்தந்த நிறுவனங்களே பெற்று மறுசுழற்சி செய்யலாம் எனவும் இந்த அமைப்பு மேலும் வலியுறுத்திவருகின்றது.
எனவே மேற்குறித்த அம்சங்களை நோக்கில் இந்த இலத்திரனியல் வளர்ச்சிகண்ட உலகில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியையோ, உபயோகத்தையோ தடைசெய்ய முடியாது. இதனால் மின்னணுக் கழிவுகளின் உருவாக்கமும் தடைசெய்ய முடியாத ஒன்றாகும். இருப்பினும் மின்னணுக்கழிவுகள் குறித்து கவலைகொள்ள வேண்டிய கட்டத்திலும் இன்றைய மனித சமுதாயம் தள்ளப்படடிருக்கின்றது. எனவே இதற்கு சரியான தீர்வானது அனைத்து நாடுகளின் அரச கொள்கைகளிலும் மக்கள் அனைவரின் மனநிலையிலேயுமே தங்கியிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


முடிவுரை
இ.கழிவுகள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாதவை ஆகும் எனவே இவற்றை எவ்வாறு முகாமை செய்ய வேண்டும் மற்றும் இதன் பாதிப்பில் இருந்து சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற பொறிமுறையினை நாடுகள் சரியாக பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும்



No comments:

Post a Comment