Wednesday, June 29, 2016

அரசறிவியலை வரைவிலக்கணப்படுத்துக?

அரசறிவியல் பற்றி ஒரு பொது வரைவிலக்கணம் காணப்படுவதில்லைசிலர் அதை ஆட்சிக்கலைஎன்றும்அதிகாரம் பற்றிய கலை என்றும் இன்னும் சிலர் இவை இரண்டையும் கவனத்திலெடுக்கும்பாடம் என்றும் பொருள் கூற முட்படுகின்றனர்இதற்கு மேலதிகமாக அண்மைக்காலத்தில்அரசறிவியல் என்பது அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல் மோதல்முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்த்தல் என்பவற்றை கவனத்தில் எடுக்கும் பாடம் என்றும் பொருள்கூறப்படுகின்றதுமேற் குறிப்பிட்ட சகல விடயங்களும் இறுதியாக அரசோடு தொடர்பு படுகின்றனஎன்றும் எந்தவொரு விடயமும் அரசியலில் இருந்து விடுபடுவதில்லை என்றும் அரசை மையமாகக்கொண்டு அவை பல்வேறு திசைகளில் பரவியுள்ள துணைப்பிரிவுகள் என்றும் தெரிகின்றது.இப்பரவலானது அரசு முறையின் வளர்ச்சி அரசின் செயற்பாட்டுபரப்புகாலத்தின் தேவைக்கேற்ப மாற்றமுற்றமை என்பனவற்றோடு இணைந்தே இடம்பெற்றுள்ளது.


அரசறிவியல் ஒரு சுதந்திரமான பாடத்துறையாக ஆரம்பமாகிய புராதான கிரேக்க காலத்திலிருந்துஉரோமர் மற்றும் மத்தியகாலம் ஈராக நவீனகாலம் வரை அரசறிவியலைக்கற்ற சகலரும் அரசைமையமாகக் கொண்டே அதனை ஆராய்ந்துள்ளனர்அரசு என்றால் என்னஅது எவ்வாறு தோன்றியது?அரசின் இயல்பு யாதுஅரசின் நோக்கங்கள் யாவைபிரஜைகளுக்கு உச்சமான லௌகீக மற்றும்ஆன்மீக வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்கு அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்றவிடயங்களை கற்பதை கவனம் செலுத்தப்பட்டுள்ளதுதற்காலத்தின் ஆரம்ப பகுதிவரை அரசு பற்றிகற்கையே அரசியலாகும் என்ற பழங்கருத்தே அரசறிவியல் பற்றிய பொருள் கூறலாகஅமைந்திருந்தது.

தற்காலத்தின் ஆரம்பத்தில் அதிகாரம் பற்றிய கற்கையே அரசறிவியலாகும் என்ற வரைவிலக்கணம்முன்வைக்கப்பட்டதுஇக்காலப்பகுதியில் தேசிய அரசு முறையின் தோற்றத்தோடு தேசிய அதிகாரமேஅரசின் இறுப்பை நிர்ணயிக்கலாயிற்றுஅதன் பின்னர் தேசிய அதிகாரத்தைப் பெறுதல் பேணுதல்நடைமுறைப்படுத்துதல் என்ற விடயங்கள் சிலரின் கவனத்திற்கு உட்பட்டதுஅவர்கள் அதிகாரவியல்பற்றிய சிந்தனாவாதக்குழுவை சேர்ந்தவர்களாவர்இதன் ஆரம்ப கர்த்தா மாக்கியாவலிலயாவார்அரசுஎன்பது ஒரு அதிகாரத்தாபனமாகும் என்ற அடிப்படையில் அரசை கற்போரின் கருத்துப்படி அரசறிவியல்என்பது அரசியல் அதிகாரத்தைப் பற்றி கற்கும் பாடமாகும் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது.

தேசிய அரசு முறைமை சர்வாதிகாரத்தன்மையில் இருந்து விடுபட்டு ஜனநாயக முறையினதாகமாற்றமுற்றதன் பின்பு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் உருவாகிய அரசியல்கட்சிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாக அதிகாரவியல் நோக்கில் அரசியலை கவனத்தில்எடுத்தல் மேலும் உறுதியடைந்தது.

இருபதாம் நூற்றாண்டில் உருவாகிய பொதுநல அரசு முறையின் கீழ் மனிதனின் சமூக பொருளாதாரபிரச்சினைகளை தீர்த்துஅவர்களின் பொது நலனை நிறைவேற்றுவதில் அரசு எவ்வாறு செயற்படவேண்டும் என்ற விடயம் அரசியலில் பிரதான இடத்தைப் பெற்றதோடு பொதுக் கொள்கையின்உருவாக்கம் மற்றும் அவற்றின் நடைமுறை என்ற விடயம் அரசறிவியலில் சேர்ந்துக் கொண்டது.மேலும் அண்மைக்காலத்தில் அரசுகளில் உள்வாரியாகவும் அரசுகளுக்கு இடையிலான உறவுகளின்போதும் ஏற்படும் வெளிவாரியான மோதல்களின் போதும் மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல்தீர்த்தல் பற்றிய கற்கையும் அரசறிவியலாகும் என்ற கருத்து உருவாகியது.

  இதன்படி கால மாற்றத்தோடு அரசறிவியலின் உள்ளடக்கமும் மாறற்றமுற்றுள்ளதுஇதனால் இதுபற்றிய ஒரு பொதுவான வரைவிலக்கணத்தை முன்வைத்தல் கடினமானதாகும்எவ்வாறாயினும்இறுதி விளக்கத்தின்படி சகல விடயங்களும் அரசுடன் தொடர்பு படுகின்றனஆட்சிக்கலைஅரசியல்அதிகாரம்பொதுக் கொள்கைமோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்த்தல் போன்றவிடயங்களையும் அரசோடு தொடர்பு படுத்த வேண்டியுள்ளதுஅவை அரசோடு இணைந்தவையாகும்.அரசியல் என்பது அரசோடு ஆரம்பித்து அரசுடனையே முடிவுறுகின்றது என்று கார்னர் கூறுகின்றார்.

இவ்வாறு அரசறிவியலுக்கான விளக்கங்களை ஓரளவிற்கு ஓர் எல்லைக்கள் அடக்க முடிந்த போதிலும்,அரசறிவியல் கல்விக்கு ஒரு தெளிவான வரைவிலக்கணத்தை இலகுவில் வழங்கிவிட முடியாது.நெகிழ்ச்சியற்ற முறையில் திடமான ஒரு விளக்கத்தை அரச அறிவியலக்கு வழங்கவது கடினமானமுயற்சியாகவே தென்படுகின்றதுமாறாக தெளிவான முறையில் நெகிழ்ச்சியற்ற வரைவிலக்கணம்ஒன்று வழங்கப்படமாயின் சமூக விஞ்ஞானமான அரசறிவியலின் வளர்ச்சி தடைப்படக் கூடும் என்பதுஉணரப்பட வேண்டிய ஒன்றாகும்சமூக மாற்றத்திற்கும் நெகிழ்ச்சிக்கும் ஏற்ப அரசறிவியலின்நோக்கங்களும் தன்மைகளும் விளக்கங்களும் மாறுபட்டே செல்லும் என்பதால் அரசறிவியலின்உள்ளடக்கத்தை மிக சரியாக வரையறுப்பது கடினமானதாகும்இருந்தப் போதிலும் ஆள்வோர் -ஆளப்படுவோர் ஆகிய இரு சாராருக்கும் இடையிலான உறவுகளையும் அவை தொடர்பான செயன்முறைகளையும் விளக்க முட்படும் ஒரு கற்கைநெறியே அரசறிவியல் என்று கூறுவதுபொருத்தமானதாக அமையக்கூடும்.

No comments:

Post a Comment